கோட்டாபய மீது மிகுந்த வெறுப்புடனே தமிழ் மக்கள் உள்ளனர்: ஸ்ரீநேசன்

தமிழர்களின் அழிவிற்கு காரணமாக இருந்த பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது மிகுந்த வெறுப்புடனே எமது மக்கள் இருக்கின்றனரென  நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

கல்குடாவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீநேசன் மேலும் கூறியுள்ளதாவது, “கருணாவும் வியாழேந்திரனும் ஒரே அணியில் இருந்து தமிழர்களின் வாக்குகளை தங்கள் அணிக்கு வாங்கி தரப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒவ்வொரு காலத்திலும் தேர்தல் காலம் நெருங்கியவுடன் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு  வெவ்வேறு விதமாக கருத்துக்களை வெளியிட்டு தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றனர்.

அந்தவகையில் எது எவ்வாறாயின் தமிழ் மக்களின் அழிவிற்கு காரணமாக இருந்த கோட்டா மீது இன்னும் வெறுப்புடனும்  கோபத்துடனே எமது மக்கள் உள்ளனர்.

ஆகவே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வொன்று கிடைக்க வேண்டும். இதனால் வாக்குகளை பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, ஏமாற்றிவிட்டு பின்னர் தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றவர்களுக்கு தமிழ் மக்கள் சிறந்த பாடம் புகட்ட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Share the Post

You May Also Like