சதி நாடகத்தை முறியடிக்கவே கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கியது:ஞா.சிறிநேசன்

ஒக்டோபர் சதி நாடகத்தை முறியடிக்கின்ற விதத்தில் ஜனநாயகம் சார்பாகவும், அரசியல் யாப்பு சார்பாகவும் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கியது.அதன் காரணமாக சில அபிவிருத்திகளை செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாடசாலை கட்டடங்களின் இரண்டாம் கட்ட திறப்பு விழா இன்று நடைபெற்றுள்ளது.இதன்போது மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் ஆரம்ப பிரிவில் அமைக்கப்பட்டுள்ள கற்றல் வள நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,கடந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் ஜனநாயகத்திற்கு மாறான முறையில், சட்ட ஆட்சிக்கு முரணான வகையில் அரசாங்கத்தை கவிழ்த்து சதி நாடகமொன்று நிகழ்த்தப்பட்டது.அந்த சதி நாடகத்தை முறியடிக்கின்ற விதத்தில் ஜனநாயகம் சார்பாகவும், அரசியல் யாப்பு சார்பாகவும் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கியது.


அதன் காரணமாக சில அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு எமது கட்சியிடம் சில ஆலோசனைகளை மேற்கொண்டு சில விடயங்களை செய்துகொண்டிருக்கின்றார்கள்.பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களை எங்களிடம் ஆலோசனை பெற்று செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு தரப்படுகின்ற கற்றல் வள நிலையங்களை பயன்படுத்துவது மிக முக்கியமானது. இவற்றை முறையாக பயன்படுத்துவதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கும் பயன்படுத்துவதற்குரிய சந்தர்ப்பத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
சில மாணவர்கள் இவற்றை பயன்படுத்துகின்ற போது வன்முறைகளை திணிப்பதுண்டு. இதன் காரணமாக அவை உடைந்து சிதறிக்கிடப்பதுண்டு. அவ்வாறல்லாமல் நாங்களும் பயன்படுத்த வேண்டும்.

எமது எதிர்கால சந்ததியினரும் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் சரியான முறையில் பயன்படுத்தும் போது உதவி செய்கின்ற உத்தமமான குணத்தை பெற்றவர்களாவீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்

Share the Post

You May Also Like