ஜனாதிபதித் தேர்தல் யாரை ஆதரிப்பதென்று முடிவில்லை!

ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாம் ஆதரவளிப்போம் என்று அதன் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கருதினாலும், நாங்கள் இதுவரையில் எந்தவொரு நிலைப்பாட்டினையும் மேற்கொள்ளவில்லை என தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக யாரைக் களமிறக்குவது என்பது அவர்களது கட்சியின் உள்ளக விவகாரமாகும். அவ்வாறிருக்க ‘இவரைத்தான் களமிறக்க வேண்டும், இவரைக் களமிறக்கக் கூடாது’ என்று நாங்கள் கருத்துக்கூற முடியாது. யாரை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க வேண்டும் என்பதை ஐக்கிய தேசியக் கட்சியே தீர்மானிக்க வேண்டும்.

தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குவதில் யார் சாதகமான நிலைப்பாட்டையும், அதற்குரிய செயற்திட்டங்களையும் கொண்டிருக்கிறார்களோ அவர்களையே நாங்கள் ஆதரிப்போம்.

இந்நிலையில் இவ்விடயங்கள் தொடர்பில் இதுவரையில் எவ்வித உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை. ஆனால் எம்முடன் பேசவிரும்பும் அனைத்துத் தரப்புக்களுடனும் பேசுவதற்கு நாங்களும் தயாராகவே இருக்கின்றோம் என்றும் கூறினார்.

Share the Post

You May Also Like