ஊர்காவற்றுறைக்கு சராவின் நிதியில் மின்விளக்குகள்!

இலங்கை தமிழரசு கட்சியின் வாலிப முன்னணி உப செயலாளர் கருணாகரன் குணாளனின் கோரிக்கைக்கு இணங்க நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களால் Ridp ஊடாக ஐந்து இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஊர்காவற்துறை பிரதேச சபையின் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

அதற்கமைய நேற்றுமுந்தினம் தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை மூலக்கிளை செயலாளர்  மடுத்தீன் பெனடிக்ற் ( சின்னமணி ) அவர்களின் முழுமையானஒருங்கிணைப்பில் இருபது மின்விளக்குகள் ( 30 w ) பொருத்தப்பட்டுள்ளன . மிகுந்த சிரமத்தின் மத்தியிலும் ஒரே நாளில் இவை பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது . பிரதேச சபை உறுப்பினர் சுபத்திரா , தமிழ் அரசுக் கட்சியின் அனலைதீவு செயற்பாட்டாளர்களான நடனசிகாமணி , தேவன் , பருத்தியடைப்பு சிவநாதன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர் .

யாழ் குடாநாட்டிலுள்ள தரைப்போக்குவரத்து தொடர்பற்ற தீவுகளான அனலைதீவு , எழுவைதீவு , நெடுந்தீவு , நயினாதீவு போன்ற கிராமங்களில் முழுமையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தீவக தொகுதி கிளை மற்றும் வாலிப முன்னணி ஊடாக பலதரப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

Share the Post

You May Also Like