மாவை நிதியில் அளவெட்டியில் சிறுவர் விளையாட்டு முற்றம்!

கும்பழாவளை பாலர் கல்விச்சோலை விளையாட்டு முற்றம் அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசா 10 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட விளையாட்டு முற்றத் திறப்புவிழா இன்று விளையாட்டுமுற்றம் அமைந்துள்ள இடத்தில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் பிரதம விருந்தினராக நிகழ்வில் கலந்து முற்றத்தைத் திறந்துவைத்தார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தனும், வலி.வடக்கு பிரதேச செயலர் சிவஸ்ரீயும் கலந்துகொண்டனர்.

கௌரவ விருந்தினர்களாக வலி.வடக்கு பிரதேசசபை கும்பழாவளை வட்டார உறுப்பினர் லயன் செ.விஜயராஜ், அளவெட்டி மத்தி கிராம சேவையாளர் சி.சுமந்திரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் சுமதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விளையாட்டு முற்றம் அளவெட்டி கும்பழாவளை பிரதேசத்தை வலி.வடக்கு பிரதேசசபையில் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசசபை உறுப்பினர் செ.விஜயராஜின் கோரிக்கைக்கு அமைவாக வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தனின் சிபாரிசுக்கமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவால் நிதி ஒதுக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like