சாவ. இந்துவுக்கு சுமந்திரனின் நிதியில் மூன்றுமாடிக் கட்டடம்!

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலைத் திட்டத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி  எம்.ஏ சுமந்திரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டடத் தொகுதியை இன்று திறந்துவைத்து மாணவர் பயன்பாட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கையளித்தார்.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தனின் கோரிக்கைக்கு அமைவாகவே நாடாளுமன்ற உறுப்பினரால் மேற்படி திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வித்தியாலய முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் சாவகச்சேரி நகரசபை நகர மாதா சிவமங்கை, சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் வாமதேவன், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share the Post

You May Also Like