ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்! பாகம் – 3

சவேந்திர சில்வாதலைமை தாங்கும் இராணுவத்தை  அமைதி காக்கும் பணியில் ஐநா ஈடுபடுத்தி வருவது ஆட்டுக் குட்டிகளுக்கு ஓநாயைக் காவலுக்கு வைப்பதற்கு ஒப்பாகும்!

நக்கீரன்

“தமிழ் மக்கள் கடந்த 70  ஆண்டுகளுக்கு மேலாகத்  தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றார்கள். நாங்களும் மக்களுடைய சுயநிர்ணய உரிமை, அரசியல் கைதிகள் விடுதலை என்பவற்றை வலியுறுத்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம். எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் ஒரு தன்னாட்சியுடன் வாழக்கூடிய ஒரு அதிகாரத்திற்காகவும் நாங்கள் போராடி வருகின்றோம்.

எமது மக்களைக் கொன்று குவித்து பெரும் மனிதப் படுகொலைகளைச் செய்தவர்கள் இன்று உயர்பதவிகளை வகிக்கின்றார்கள். ஆனால் எமது மக்களுக்கு அடிப்படை உரிமைகளைக் கூட இதுவரை வழங்கவில்லை” இவ்வாறு  கடந்த  14 செப்தெம்பர், 2019 அன்று கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப அலுவலகத்தின் திறப்பு விழாவில்  முதன்மை   விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா  தெரிவித்துள்ளார்.ро?ро▓ро?рпНро?рп? ропрпБродрпНродро?рпН ро?рпБро▒рпНро▒ро╡ро╛ро│ро┐ропро╛ро? ро?ро?рп?ропро╛ро│рокрпНрокро?рпБродрпНродрокрпНрокро?рпНро?ро╡ро░рпН, ро░ро╛рогрпБро╡ родро│рокродро┐ропро╛ро? роиро┐ропрооро┐ро?рпНро?рокрпНрокро?рпНро?ро╛ро░рпН

அண்மையில்  இராணுவ தளபதியாக பதவி உயர்வு பெற்ற  சவேந்திர சில்வா,  கொழும்பிலும் அதன் புறநகர்களிலும் வாழ்ந்த 11 தமிழ் இளைஞர்கள்  படுகொலை செய்யப்பட்டதில் பங்கு உண்டு என்று இனம் காணப்பட்ட  லெப். ஜெனரல்  வசந்த கருணகொட,   உக்ரேனிலிருந்து மிக் 27 விமானங்களை வாங்கியதன் மூலம் 14 மில்லியன் அ.டொலர்களை பணச் சலவை செய்தது  தொடர்பாக கைது செய்யப்பட்ட றோஷான் குணத்திலக்க போன்றோருக்கு  பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதையே மாவை சேனாதிராசா தனது பேச்சில்  மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார். .

இந்த மூவரும் போர்க்காலத்தில்  பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராசபக்சவின் நெருக்கமாக இருந்தார்கள். கோத்தபாய எள் என்றால் இந்த மூவரும்  எண்ணெய்யாக இருந்தார்கள்.

2009 சனவரியில்  சவேந்திர சில்வா  இராணுவத்தின் முதன்மை அதிகாரியாக பதவி ஏற்றம் செய்த போது எழுந்த கண்டனங்களை விட இம்முறை சகல தரப்பில் இருந்தும் கடுமையான கண்டனக் கணைகள் அவர் மீது நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பாய்ந்துள்ளன.

பாரதூரமான Ц நம்பகத்தன்மைமிக்க மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவத் தளபதி பதவியை அரசு உடன் பறித்தெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார் .

லெவ்.ஜெனரல் சவேந்திர சில்வா மீது பாரதூரமான Ц நம்பகத்தன்மைமிக்க போர்க்குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும்கூட இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நா. உறுப்பினரும் ஆன  ம.ஏ. சுமந்திரன் போர்க்குற்றங்கள் சாட்டப்பட்டுள்ள  சவேந்திரா சில்வாவை  இராணுவ தளபதியாக சனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமை தமிழ் மக்களை  அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  மேலும் கடுமையான குற்றங்கள்  சாட்டப்பட்ட ஒரு நபரை சிறீலங்காவின்  இராணுவத் தளபதியாக நியமித்தமை  தமிழ் மக்களை அவமரியாதைக்கு உட்படுத்தும் செயற்பாடாகும்.  இந்த நியமனம் குறித்து நாங்கள் ஆழமான அதிருப்தி அடைந்துள்ளோம்  எனத் தெரிவித்துள்ளார்.

The appointment of Shavendra Silva, an individual who stands accused of grave crimes as Sri Lanka’s army commander is a serious affront to the Tamil people. We are deeply dismayed by this appointment.

சவேந்திர சில்வா மட்டுமல்ல கொழும்பிலும் அதன் புறநகர்களிலும் வாழ்ந்த 11 தமிழ் இளைஞர்கள் கப்பம் கேட்டுக் வெள்ளை வானில் கடத்தப்பட்டு, கப்பம் கொடுக்கப்பட்ட பின்னரும்

 படுகொலை செய்யப்பட்டதில் பங்கு உண்டு என்று இனம் காணப்பட்ட லெவ். ஜெனரல் கருணகொடவுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.Image result for yasmin sooka

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான சான்றுகள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் விசாரணைகளை மேற்கோள்காட்டி சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு பன்னாட்டு உண்மை மற்றும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சவேந்திர சில்வா சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் அவரின் விருப்பத்தை காண்பித்த மனிதர். அவரின் பதவி நாடளாவிய ரீதியில் பீதியை ஏற்படுத்தும். எண்பதுகளின் பிற்பகுதியில் ஜேவிபி கிளர்ச்சியின்போது, அதனை அடக்குவதில் சவேந்திர சில்வாவின்  வகிபாகம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு அவர் ஒருபோதும் பதிலளிக்கும் கடப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. அக்காலக்கட்டத்தில் மரணதண்டனைகள், காணமாலாக்கப்படுதல், சித்திரவதை, பாலியல் வன்முறை, ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் தடுத்துவைப்பு போன்றவை தொடர்பான நம்பகரமான குற்றச்சாட்டுக்கள் இருந்தன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபை “மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக சனாதிபதி சிறிசேனா நியமித்திருப்பது  போர்க் காலத்தில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள், மனிதகுலத்துக்கு  எதிரான குற்றங்கள்  தொடர்பாக எந்தவித பொறுப்புக் கூறலும்  இல்லை என்பதைக் காட்டுகிறது” என தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

சிறீலங்காயின் இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை சனாதிபதி நியமித்திருப்பது, ஆயுத மோதலின்  போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலின் முழுமையான பற்றாக்குறையைக் காட்டுகிறது.

The President’s appointment of  Shavendra silva as Sri Lanka’s army commander illustrates absolute lack of accountability for war crimes and crimes against humanity during the armed conflict.

சவேந்திர  சில்வா எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுகளின் ஈர்ப்பு இருந்தபோதிலும், முந்தைய அல்லது தற்போதைய அரசாங்கம் அவற்றை விசாரிக்கவில்லை என்று கொழும்பை தளமாகக் கொண்ட கொள்கை மாற்றத்துக்கான மையம் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. “உண்மையில், மேஜர் ஜெனரல் சில்வாவின் தொடர்ச்சியான விளம்பரங்கள் இந்த மீறல்களுக்கு எவ்வாறு வெகுமதி அளிக்கப்படுகின்றன என்பதை  எண்பிக்கிறது” என அது அறிக்கையில் கூறியுள்ளது.

“போர்க் குற்றவாளி ஒருவரை இராணுவத் தளபதியாக நியமிப்பது தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் எதிர்காலம் இல்லை என்ற விடயத்தை தற்போதைய ஜனாதிபதி கூறியுள்ளதாக” அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம் தெரிவித்தது.

கோத்தபாய இராசபக்ச சனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் களம் இறக்கப்பட்ட நிலையில், சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதில் ஏதோ ஒரு ஒற்றுமை காணப்படுவதாக பலர்  சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்த ஒற்றுமையை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, யுத்தக் குற்றங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியிலேயே சனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை தமிழர்கள் தெரிவுசெய்தனர். பன்னாட்டு மட்டத்தில் யுத்தக் குற்றவாளி என அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஒருவரை இராணுவ தளபதியாக நியமித்துள்ளதை,  பன்னாட்டுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் விடுத்துள்ள சவாலாகவே கருதுவதாக  அவர் மேலும்  குறிப்பிட்டார்.

லெவ்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம், 2009 இல் முடிவுற்ற மிருகத்தனமான மோதலின் பின்னரான, நிலையான நல்லிணக்கத்துக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் மற்றும்  அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய இராச்சியம், கனடா போன்ற நாடுகள்  கண்டனமும் எச்சரிக்கையும்  விடுத்துள்ளன. சிறிலங்காவை கண்டித்த நாடுகளில் அமெரிக்காவின் கண்டனம் சிறிலங்காவை கடுமையாக எச்சரிக்கும் பாணியில் அமைந்திருந்தது.

மோசமான மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளாகிய லெவ்.ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை ஆனது வெளிநாட்டு முதலீடுகளையும், இராணுவ ஒத்துழைப்பையும் பாதிக்கும் என்று  ஓகஸ்ட் 21  அன்று செய்தியாளர்களிடம் பேசிய, அமெரிக்க இராசாங்கத் திணைக்கள அதிகாரி  எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது –

“இந்த நியமனம் 2009 இல் முடிவடைந்த மிருகத்தனமான மோதலைத் தொடர்ந்து  உருவாக்கப்பட்டு வரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு  நிலையான தாக்கங்களைக் கொண்டிருக்கும். சில அரசியல் சக்திகள் தேசியவாதத்தை வைத்து விளையாடுவதன் மூலம், அதிக பயன் அடையலாம் என்று கருதுகின்றன.Image result for US Ambassador in Colombo

“தெளிவான  நன்கு ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் பதிவுகளில் உள்ள ஒரு ஜெனரலின்  பதவி  உயர்வு  மூலம் இந்த தேசியவாதம் செயற்படுத்தப்படுவது துரதிட்ட வசமானது.  இது குறித்து  நாங்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளோம் Ф என்றார்.

போரின் இறுதிக் கட்டங்களில் கருத்துவேறுபட்ட தமிழ்ப்  புலிகளுக்கு எதிராக ஒரு இராணுவப் பிரிவை வெற்றிகரமாக வழிநடத்திய ‘பெருமை’ சில்வாவுக்கு உண்டு. ஆயுத மோதலின் கடைசிக் கட்டங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.  அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட  Сno fire zonesТ பகுதிகள் மருத்துவமனைகள் உட்பட,  தொடர்ச்சியான இராணுவ ஷெல் தாக்குதலுக்கு உட்பட்டது,

அமெரிக்க  அதிகாரி “இராணுவத் தளைபதி  ஒரு அறியப்பட்ட மனித உரிமை மீறல் செய்பவராக இருந்தால் இலங்கையுடன் ஒரு வலுவான இராணுவ உறவை வளர்த்துக் கொள்வதால் நாம் என்ன செய்ய முடியும் என்பதற்கு வரம்புகள் இருக்கும்” என்றார்.

“வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக துருவமுனைப்புக்கு வழிவகுக்கும் ஒரு சூழ்நிலையைக் கண்டால் ஆபத்துக்களை எடுக்க தயாராக இருப்பதற்கு வரம்புகள் உள்ளன,” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

சவேந்திர சில்வாவின் பதவியுயர்வு இலங்கையின் நகர்ப்புற போக்குவரத்து அமைப்பு மற்றும் உள்க் கட்டமைப்பை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க  Millennium Challenge Corporation மூலம்  வழங்கப்படும் அ.டொலர்  480 மில்லியன்  மானியத்தையும் பாதிக்கக்கூடும் என்று அந்த அதிகாரி எடுத்துரைத்தார்.  சில்வாவின் பதவி உயர்வு MCC  முதலீட்டைப் பாதிக்குமா என்று கேட்கப்பட்டதற்கு, ஒரு நாடு சனநாயகத்திற்கான அதன் உறுதிப்பாட்டின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. அதுவும் ஒரு காரணியாகப் பார்க்கப்படும்” என்றார். இந்த ஒப்பந்தம் இலங்கையின் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.Image result for millennium challenge corporation sri lanka

அ.டொலர் 480 மில்லியன் என்பது  கொஞ்சநஞ்ச தொகையல்ல. இன்றைய இலங்கை நாணய மதிப்பீட்டில் உரூபா 86,400 மில்லியன் (8640 கோடி) ஆகும்.  வட மாகாண சபைக்கு முதலீட்டுச் செலவு உட்பட 2017 இல் உரூபா 25,308 மில்லியன், 2018 இல் உரூபா 25,684 மில்லியன் ஒதுக்கப்பட்டது. இதில் முதலீட்டுச் செலவை மட்டும் எடுத்துக் கொண்டால் 2017 இல் உரூபா 4,733 மில்லியன், 2018 இல் உருபா 3,533 மில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்டது.

இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை குறித்து தாம் கவலையடைந்துள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றின் ஊடாகக் குறிப்பிட்டுள்ளது.

ஓகஸ்ட் 19 அன்று விடுத்த செய்தி அறிக்கையில் “லெவ்டினன்ட் ஜெனரல்சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமித்ததையிட்டு அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.  அவருக்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன.  அவை தீவிரமான மற்றும் நம்பகமானவை. இந்த நியமனம் இலங்கையின் பன்னாட்டு நற்பெயரைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.  நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான அதன் உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக  ஆக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிக முக்கியமாகக் கருதப்படும் கால கட்டத்தில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள கனேடிய உயர் தூதரகம் ஓகஸ்ட்  21 அன்று பின்வரும் அறிக்கையை வெளியிட்டது:

இலங்கையின் ஆயுத மோதலின் போது மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளை இழைத்த  லெவ். ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்தது குறித்து கனடா கடுமையான கவலைகளை வெளிப்படுத்துகிறது. இந்த நியமனம் இலங்கையின் சொந்த மக்களிடமும், ஐநா மனித உரிமைகள் பேரவையுடனும் – தேசிய நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை நோக்கமாகக் கொண்ட கூடுதல் முயற்சிகளுக்கு குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. நீண்டகால அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைய வேண்டுமானால் பொறுப்புக்கூறல் செயல்பாட்டில் நம்பிக்கையும்,  தண்டனையிலிருந்து விலக்கும் மேலான நம்பிக்கையும் இருக்க வேண்டும்.”

இராணுவத் தளபதியாக லெவ். ஜெனரல் சில்வா நியமிக்கப்பட்டதிலிருந்து தெரிவிக்கப்பட்ட கருத்துகளைப் பற்றி சிறீலங்கா வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்த நியமனம்  இறையாண்மை படைத்த சிறீலங்கா நாட்டின் தலைவரின் முடிவாகும். இலங்கையில் பொது சேவை மேம்பாடுகளின் முடிவுகள் மற்றும் உள் நிருவாக செயல்முறைகளைப் பாதிக்க முயற்சிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் தேவையற்றவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” எனக் கூறப்பட்டது.

இலங்கையின் புதிய இராணுவத் தளபதி  சவேந்திர சில்வா தனது நியமனம் குறித்த சர்வதேச சீற்றத்தை ஒதுக்கி வைத்துவிட்டு,  தான் போர்க்குற்றங்கள் செய்ததாக “யார் வேண்டுமானாலும் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும்” என்று கூறினார். ஆனால் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் சில்வாவுக்கு எதிரான மொத்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை “தீவிரமான மற்றும் நம்பகமானதாக” விவரித்தது.

சிறிலங்கா அரசாங்கம் இந்தக் கண்டனக் கணைகளை உதறித்தள்ளினாலும் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பது யதார்த்தமாகும். அமெரிக்கா எச்சரிக்கையோடு நில்லாமல் செயலிலும் இறங்கியுள்ளது.  அமெரிக்காவின் மில்லேனியம்  அறைகூவல்  திட்டத்தின் கீழ் அ.டொலர் 480 மில்லியன் (உரூபா 8640 கோடி)  நிதியுதவியைத் திரும்பப் பெற்றுள்ளது. சிறீலங்காவின் சனாதிபதி சிறிசேனா இரண்டு இராணுவ உடன்படிக்கைகளில் கையெழுத்திட மறுத்தது முக்கிய காரணம் என்றாலும் போர்க் குற்றங்கள் சாட்டப்பட்ட சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக பதவி உயர்த்தப்பட்டதும் ஒரு காரணமாகும். இந்த நிதி நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட இருந்தது. பயணிகள் போக்குவரத்துச் சேவையின் அபிவிருத்திக்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குமான புதிய செயற்திட்டமொன்றை  நடைமுறைப் படுத்த குறித்த நிதியை முதலீடு செய்ய அமெரிக்கா எண்ணியிருந்தது.

தற்போது சிறீலங்காவின் இராணுவத்தின் ஒரு பிரிவு ஐநா வின் அமைதி காக்கும் படையில்  பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது. 2017  டிசெம்பரிலும்  2018 சனவரியிலும்    சிறீலங்காவின் இராணுவம் மாலி நாட்டில் ஐநா வின் அமைதி காக்கும் படையில் கடமையாற்றுவதற்கு அனுப்பப்பட்டது. இதில்  இராணுவ பொலிஸ் படையணி, இராணுவ பொறியியலாளர்கள்,  சமிக்ஞைப் படையணி, இயந்திர காலாட்படை, மருத்துவப் படைகளின் உறுப்பினர்கள் என 184 பேர்களும், மற்றும் இராணுவத்தின் 16 அதிகாரிகளும் சென்றனர்.  லெவ். கேணல்  கலனா அமுனுபுர மற்றும் மேஜர் ஹசந்த ஹென்னடியுடன் இரண்டாவது கட்டளை அதிகாரியாக இணைந்து கொண்டார்.Image result for Lieutenant Colonel Kalana

ஆனால் அதே ஆண்டு ஒக்தோபரில் ஐநா சபை கேட்டுக் கொண்டதற்கு இணங்க லெவ்.  கேணல் கலான அமுனுபுர நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.  காரணம் சிறீலங்கா இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2009  ஆண்டு நடந்த கடைசிக் கட்ட போரில் கலான அமுனுபுர போர்க்குற்றங்கள் இழைத்தார் என தென் ஆபிரிக்காவைத் தளமாகக் கொண்ட  சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு ஐநா சபைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் அவர் உட்பட 56  பேர்கள் மீது போர்க் குற்றச் சாட்டுகளைச் சுமத்தியிருந்தது. போர்க் குற்றச் சாட்டுக்கு ஆளாகிய இராணுவ அதிகாரிகள் ஐநா அமைதி காக்கும் படையில் இடம்பெறக் கூடாது என அந்த அமைப்பு கேட்டிருந்தது.

இதே போல் 2007 ஆம் ஆண்டு ஹெயிட்டி நாட்டுக்கு  100 க்கும் மேற்பட்ட இலங்கை  இராணுவத்தினர் அமைதி காக்கும் படைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால்  பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளின் விளைவாக அவமானமாக ஹைட்டியில் இருந்து சிறீலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். குற்றவாளிகளை விசாரித்து அவர்கள் மீது வழக்குத் தொடுப்பதாக சிறீலங்கா அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால் அது அவ்வாறு செய்யவில்லை. 2009 ஆம் ஆண்டில் 20  இராணுவத்தினர்  ஒழுங்கு தடைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ள போதும்  யார் மீதும் வழக்குத் தொடரப்படவில்லை.

ஐ.நா மற்றும் சிறீலங்கா இராணுவத்தினர் உட்பட அமைதி காக்கும் படையினருக்கு எதிராக ‘அமைதி காக்கும் குழந்தைகளின்’ தாய்மார்கள் குழந்தை பராமரிப்பு மற்றும்  தந்தைவழிக் கொடுப்பனவுகளை கோரி வழக்குத் தொடர்ந்தனர்.  2004 முதல் 2007 வரை  குறைந்தது 134 இலங்கை அமைதி காக்கும் படையினர் ஹெயிட்டி நாட்டின் குழந்தைகளை பாலியல் ரீதியில்  சுரண்டியதாக கூறப்படுகிறது.

இதன் பின்னரும் சிறீலங்கா இராணுவம்  ஐநா  அமைதிப் படையில் எவ்வாறு  தொடர்ந்து – ஒருமுறையல்ல 10 முறைக்கும் அதிகமாக –  ஈடுபட்டு வருகிறது என்பது வியப்பாக இருக்கிறது.  அது மட்டுமல்ல ஐநா சபைக்கு அறைகூவல் விடுப்பது போலப் போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றில் குற்றம் சாட்டப்பட்டு வரும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தலைமை தாங்கும் சிறீலங்கா இராணுவத்தை ஐநா சபையின் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தி வருவது   ஐநா சபையின் கொள்கை, கோட்பாடு, விதிகள், வழிகாட்டுதல்கள் போன்றவற்றுக்கு முரணானது  ஆகும். ஆட்டுக்குட்டிகளுக்கு ஓநாயைக்  காவலுக்கு வைத்ததற்கு ஒப்பாகும்.

 

Share the Post

You May Also Like