கல்குடாத்தொகுதி மக்களின் தேவைகளை கேட்டறிந்து கொண்டார் ஸ்ரீநேசன் எம்.பி

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத்தொகுதியில் அமைந்துள்ள கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முறுத்தானை, பூலாக்காடு, அக்குறானை, மற்றும் பிரம்படித்தீவு கிராமங்கள் அதிகஷ்டப் பிரதேசத்தில் காணப்படுகின்றன.

இக் கிராமங்களை பாராளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் அவர்கள் 01.10.2019 அன்று கள விஜயம் செய்தார்.

காடு சார்ந்த, வயல் சார்ந்த, முல்லை, மருதம் பிரதேசங்களாக இவை காணப்படுகின்றன.

இப் பிரதேசத்தில் எமது தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகள், தேவைகள் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் மக்களோடு உரையாடிய போது பல பிரச்சனைகளையும், தேவைகளையும் எடுத்துக் கூறினர்.

• காட்டு யானைகளின் தாக்குதல் , அச்சுறுத்தல்.
• குடிநீர்ப் பிரச்சனை.
• வீடுகள் இன்மை, வீடுகளின் திருத்தம்.
• ஆசிரியர் பற்றாக்குறை.
• மாணவர்கள் பல கிலோமீற்றர் தாண்டிப் பாடசாலைக்குக் கால் நடையாகப் பயணிக்கும் நிலை.
• க.பொ.த சாதாரண தரம் கற்பதற்குரிய பாடசாலை இன்மையும் மாணவர் இடை விலகலும்.
• வறுமைக்கோட்டின் கீழான வாழ்கை.
• நிரந்தர தொழில் இன்மை வாழ்வாதாரத் தேவை.

பல பிரச்சினைகள் இனங் காணப்பட்டன. தீர்வுகளைத் தீர்ப்பதற்காக உரிய அதிகாரிகளுடன் உடனுக்குடன் தொலைபேசி மூலமாக பாராளுமன்ற உறுப்பினர் தொடர்புகளை மேற்கொண்டார்.

சில பிரச்சினைகள் சிக்கலானவையாகவும், உடன் தீர்க்க முடியாதவையாகவும் காணப்பட்டன. அவை பற்றியும் எதிர்க்காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது.

Share the Post

You May Also Like