தமிழ் தரப்புக்கள் பேரம் பேசும் பலத்தை வலுப்படுத்த வேண்டும்- யாழ்.பல்கலைக்கழக ஒன்றியம்

தற்போதைய சூழ்நிலையில் தமிழ் தரப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, பேரம்பேசும் பலத்தை மேலும் வலுப்படுத்த வேண்டுமென யாழ்.பல்கலைக்கழக ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக ஒன்றியம் மற்றும் ஏனைய அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக ஒன்றியம்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘தமிழ் மக்கள் நீண்ட காலமாக போராடிக் கொண்டிருப்பது தமக்கான நிரந்தரமான அரசியல் தீர்வொன்றினை பெற்றுக்கொளவ்தற்காகவே ஆகும்.

இதுவரையில் பலவழிகளிலும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், நாம் இன்று பல தரப்புக்களாக எம்முள் பிளவுபட்டு நின்று நாம் எமது பேரம்பேசும் பலத்தை இழந்துவிடும் துர்ப்பாக்கிய நிலையில் எமது பேரம்பேசும் பலத்தை பலப்படுத்த நாம் ஒருமித்த முடிவினை எடுக்க வேண்டியது என்பது காலத்தின் கட்டாய தேவையாகும்.

இத்தகைய சூழலினை தமிழ் தரப்புக்கள் அனைத்தும் உணர்ந்து கொண்டு பிளவுபட்டு நின்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றாக கூடி கலந்துரையாடியமையும் ஆரோக்கியமாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பாதையில் பயணிக்கும் கடசிகள் ஒருமித்த நிலைப்பாடு ஒன்றை எடுப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமையும் ஆரோக்கியமான ஒன்றே ஆகும்.

அதுமாத்திரமின்றி தமிழ் கடசிகள் சார்பில் தலா இரண்டுபேர் கொண்டதாக குழு ஒன்றினை கலந்துரையாடலில் நியமித்துள்ளோம்.

மேலும் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் நாம் நிபந்தனைகளை முன்வைத்து பேரம் பேசுதல் என்றும் அத்தகைய நிபந்தனைகளினை அடுத்த கலந்துரையாடலில் முடிவு செய்வது என்றும் அதனடிப்படையில் பேரம்பேசலில் ஈடுபடுவது என்றும் அத்தகைய பேரம்பேசல் வெற்றியளிக்காத பட்சத்தில் அடுத்த கட்டத்தில் நாம் எத்தகைய முடிவொன்றை எடுக்க வேண்டும் என்பதை தொடர்ந்தும் கலந்துரையாடுவது என்றும் கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.

Share the Post

You May Also Like