மஹிந்த அன் கோ- கூட்டமைப்பு பேச்சுக்கு உடன் ஏற்பாடு செய்க!

சுமனை தொலைபேசியில் கோரினார் கோட்டா

தாமும் தமது சகோதரர்கள்  – மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஸில் ராஜபக்ஷ ஆகிய மூவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் நேரில் பேச விரும்புகின்றனர் என்றும் அதற்கு ஏற்பாடுகள் செய்யுமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம். பியுடன் நேற்றுத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கோரினா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ என அறியவந்தது.

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் அன்றாட – அவசர – நெருக்கடி ஆகியவற்றுக்கான தீர்வுகளாக நீங்கள் முன்வைக்கக்கூடிய யோசனைகள் தொடர்பில் உங்களிடம் ஒரு தெளிவான திட்டம் இல்லாமல் சந்தித்துப் பேசுவதில் பலன் விளையாது என சுமந்திரன் நேரடியாகவே கோட்டாபயவுக்குச் சுட்டிக் காட்டினார் எனவும் அறியவந்தது.

இரண்டு தடவைகள் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்தித்துப் பேசி விட்டேன். ஆனால் அவர் உருப்படியான-தெளிவான-யோசனைத் திட்டம் எதையும் வெளிப்படுத்தவில்லை .” – என்ற அதிருப்தியையும் கோட்டாபயவுக்கு சுமந்திரன் தெரியப்படுத்தினார் என்றும் கூறப்பட்டது.

அப்படியான யோசனைகள் குறித்துப் பேசித் தீர்மானிக்கவே நாங்கள் மூவரும் (மஹிந்த, பஸில், கோட்டா) உங்கள் தரப்பைச் சந்தித்துப் பேச விரும்புகிறோம் எனக்கோட்டா தரப்பில் பதிலளிக் கப்பட்டதாம்.

நீங்கள் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் போகின்றீர்கள். அதற்கு முன்னர் சந்திக்கலாமா அல்லது நீங்கள் சிங்கப்பூர் சென்று திரும்பிய பின்னர் சந்திக்கலாமா?- என சுமந்திரன்கோட் டாபயவிடம் கேட்டார்.

சகோதரர்கள் மஹிந்த ராஜபக்ஷபஸில் ராஜபக்ஷ ஆகியோரின் நேர வசதியை அறிந்துகொண்டு மீண்டும் சுமந்திரனுடன் தாம் தொடர்புகொள்வார் எனக்கோட்டா பதிலளித்திருக்கின்றார்.

தமிழர் தரப்புடன் தீர்க்கமான முடிவுஒன்றை எடுப்பதற்கு மஹிந்தர், கோட்டா, பஸில் ஆகிய மூவரும் தீர்மானித்திருக்கின்றனர் என்று அவர்கள் தரப்புச் செய்திகள் தெரிவித்தன.

Share the Post

You May Also Like