தமிழரின் இலக்கை அடைய விளையாட்டு அவசியம்! மாவை

தமிழ் சமூகம் தமது இலட்சியங்களை அடைவதற்கு விளையாட்டுத் துறையும் உறுதுணையாக இருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பிரிமியர் லீக் போட்டிகள் நேற்று (வியாழக்கிழமை)ஆரம்பமான நிலையில், குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “எங்களுடைய நாட்டில் பிறக்கும் குழந்தைகள் உடல் நலம் குறைந்தவர்களாக, மனநலம் குறைந்தவர்களாக பிறப்பதாக ஐ.நாவின் யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எங்களுடைய இளம் சமுதாயம் கூட மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  நாட்டில் இடம்பெற்ற போரும், எங்களுடைய சூழ்நிலையும் தான் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

ஆகவே எங்களுடைய விளையாட்டு வீரர்கள் சிறுவயது முதலே மனபலமும், உடல்பலமும் மிக்கவர்களாக இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

இதேவேளை கிளிநொச்சியில் பதிவு செய்யப்பட்ட கழகங்களிற்கிடையிலான கடினப்பந்து போட்டிகள் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

குறித்த போட்டியின் ஆரம்ப நிகழ்வில் தென்னிந்திய இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் அமீர், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எஸ்.சிறிதரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர், லண்டன் கற்பக விநாயகர் ஆலயம் மற்றும் அகிலன் பவுண்டேசன் ஸ்தாபகர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like