வடக்கு தெற்கு பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சந்திப்பு. முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு

வடக்கு மாகாண மாணவர்களுக்கும், தென் பகுதி மாணவர்களுக்குமிடையிலான விசேட நல்லிணக்க ஒன்றுகூடல் நிகழ்வின் ஒரு அம்சமாக யாழ் மாநகர முதல்வரை சந்திக்கும் விசேட கலந்துரையாடல் நேற்று (6) மாலை யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இசட சந்திப்பில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் யாழ் மாநகரத்தின் தற்போதைய நிலை, வடக்கு மக்களின் அரசியல் அபிலாசை, எதிர்பார்ப்பு இலங்கை மக்களாக ஒன்றித்து வாழ வேண்டியதன் முக்கியத்துவம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துரைத்தார்.

இனங்களுக்கிடையிலான நல்லுறவை வளர்த்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இவ்வாறான ஒன்றுகூடல்கள் வருடா வருடம் குறித்த அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந் நிகழ்வில் யாழ் மற்றும் நல்லூர் வலயக் கல்வித் திணைக்கள அதிகாரிகள், தென்பகுதி வலய அதிகாரிகள், இவ் ஒன்றுகூடலின் ஏற்பாட்டாளர்கள், இணைப்பாளர்கள், கலந்து கொண்ட பாடசாலைகளின்  ஆசிரியர்கள், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் மாணவர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Share the Post

You May Also Like