காவடி எடுத்தவர் யாரோ ஆடி முடிப்பவர் யாரோ…?

ன்றைய ‘காலைக் கதிர்’ நாளிதழின் ”இனி இது இரகசியம்  அல்ல…..!” பத்தி எழுத்திலிருந்து ஒரு பகுதி வாசகர்களுக்காக……!

முல்லைத்தீவு, செம்மலை, நீராவியடிப்பிள்ளையார் ஆலயச் சுற்றாடலில் நீதிமன்ற உத்தரவை மீறி, அதை அவமதிக்கும் விதத்தில் பிக்கு ஒருவரின் உடலை தகனம் செய்து விட்டு, அதைப் புரிந்து அடாவடித்தனம் பண்ணிய பிக்குகள் தம்பாட்டுக்கு அங்கிருந்து புறப்பட்டு விட்டனர்.

நமது அரசியல்வாதிகளும் தம்பாட்டு ஆர்ப்பாட்டம், அதிரடி அறிக்கைகள், கண்டன அறிவிப்புக்கள் எல்லாம் நடத்தி விட்டு அடங்கிவிட்டனர்.

நாங்களும் – பத்திரிகைக்காரர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோரும் – எங்கள் பங்குக்கு ஓங்கி ஒலித்து, கண்டித்து கட்டுரைகள், அறிக்கைகள், செய்திகள், ஆசிரிய தலையங்கங்கள் எல்லாம் வெளியிட்டு, பிரசுரித்து ஓய்ந்து விட்டோம்.

குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை ? யார் எடுப்பது?

வழமைபோலவிவகாரத்தைத் தம்கையில் – தோளில் – எடுத்திருக்கின்றார் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்.

நீதிமன்ற அவமதிப்பு , அந்த நீதிமன்ற வளாகத்துக்குள் நடந் தால்தான் அதே நீதிமன்றம் அது குறித்து விசாரிக்க முடியும். அந்த நீதிமன்றத்தின் வளாகத்துக்கு வெளியில் நடந்ததாயின் அது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் தான் முறையிட்டு நிவாரணம் பெறவேண்டும்.

நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் உடல் தகனம் நீதிமன்ற வளாகத்தில் நடக்க வில்லை . நீதிமன்ற உத்தரவு நீதிமன்றுக்கு வெளியில் தான் மீறப்பட்டுள்ளது. ஆகவே இதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரும் வழக்கு கொழும்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்தான் தொட ரப்பட வேண்டும்.

கூட்டமைப்பின் தேசியப்பட்டி யல் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, மேற்படி முல்லைத்தீவு பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோரை மனுதாரராகக் கொண்டு இந்த வழக்கைத் தொடர்வதற்கு சுமந்திரன் அன்ட் கொம்பனி சட்டத்தரணிகள் தயா ராகி வருகின்றனர் எனத் தெரிகின்றது.

எழுபதுகளின் கடைசியிலும் எண்பதுகளிலும் கைது செய்யப் படும் தமிழ் இளைஞர்களுக்காக ஆள் கொணர்வு மனுக்கள் மற்றும் வழக்குகளில் முன்னிலை யாவதற்கு கொழும்பில் ஒரு சட்டத் தரணி குழாமே எப்போதும் தயாராக இருந்தது. சட்டத்தரணிகள் சி.வி.விவேகானந்தன், ஜி.குமார லிங்கம், பேரின்பநாயகம், பாக்கிய நாதன், சந்திரகாசன், நவரத்தினம் (கரிகாலன்), கனக. மனோகரன், ஸ்ரீநிவாசன், கே.வி.தவராஜா , உருத்திரமூர்த்தி என்று தொடங்கி சிரேஷ்ட சட்டத்தரணி களான புள்ளநாயகம், நடேசன் கியூ.ஸி., அவரது மகன் சத்தி யேந்திரா, எம். சிவசிதம்பரம் வரை அந்தப் பட்டியல் மிக நீண்டது.

இப்போது கொழும்பில் பெரும்பாலும் ஆக சுமந்திரன் தலைமையில் ஒரு குழாம். அதேசமயம், பயங்கரவாதத் தடுப்பு வழக்கு விடயங்களைக் கையாளும், தமிழரசுக்கட்சியின் கொழும்புக் கிளைத்தலைவர் கே.வி.தவராஜாவும், அவர் துணைவியாரும் தான் மற்றைய குழாம்.

ஏதோ ‘சுமந்திரன் அன்ட் கோ புண்ணியத்தில் பலவழக்குகள் ஓஸியில் நடக்கின்றன. அவ்வளவுதான்.

நேற்றும் ஒரு வழக்கு வந்தது. திருகோணமலை மேல் நீதிமன் றத்தில் நீதிபதி மா.இளஞ்செழி யன் முன்னிலையில்.

கன்னியா வெந்நீரூற்று சர்ச்சை சம்பந்தமான வழக்கு.

இந்த வழக்கில் பல இடைக் கால உத்தரவுகளை நீதிமன்றம் வழங்கியிருக்கின்றமை தெரிந்ததே. அதில் ஓர் உத்தரவில் நேற்று நீதிமன்றம் தளர்வை ஏற்படுத்தியது.

மனுதாரர்களின் அங்குள்ள இந்துக் கோயில் தொடர்பாக டிக்கெட் அச்சிட்டு விற்கக் கூடாது என எதிர்மனுதாரர்களானதொல் பொருள் திணைக்களம் மற்றும் தரப்புகளுக்கான தடை உத்தரவு தொடருகின்றது எனத் தெரிவித்துள்ள நீதிமன்றம், எனினும் கன்னியா வெந்நீரூற்றுப் பரிபாலனத்துக்காக, அந்த வெந்நீரூற்றுப் பாவனை தொடர்பில் டிக்கெட் மூலம் நிதி அறவிடு வதற்கு தொல்பொருள் திணைக் களத்துக்கு அனுமதி வழங்கியது.

இந்த வழக்கிலும் சுமந்திரன் சார்பில் அவரது கனிஷ்ட சட்டத் தரணி கேசவன் சயந்தனே நேற்றும் திருகோணமலை மேல் நீதி மன்றத்தில் முன்னிலையானார்.

சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் அணியே நிதி வருமான எதிர்பார்ப்பு ஏதுமின்றி, தங்கள் சொந்தச் செலவில் இது போன்ற வழக்குகளை முன்னெடுத்து வருகின்றமையால் அந்த அணியை சுமந்திரன் அன்ட் கொம்பனி என்று நாமம் சூட்டிக்குறிப்பிட்டேன். அது தவறா வாசகரே…?

– மின்னல் –

Share the Post

You May Also Like