மயிலங்காடு ஞானமுருகன் வி.கவுக்கு சிறியின் நிதியில் உபகரணம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதி ஊடாக மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகத்திற்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இலங்கைத்தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதித் தலைவரும் வலி.தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளருமாகிய தி.பிரகாஷின் கோரிக்கைக்கு அமைவாகவே நாடாளுமன்ற உறுப்பினரால் சீருடை மற்றும்  விளையாட்டு உபகரணக் கொள்வனவுக்கான நிதி ஒதுக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் அவரின் பிரதிநிதியாக தி.பிரகாஷ் கலந்து விளையாட்டுக் கழக நிர்வாகத்திடம் இந்த சீருடை மற்றும்  உபகரணங்களைக் கையளித்தார்.

 

Share the Post

You May Also Like