செம்மலை கோயில் வளாகத்தில் செய்த அடாவடிகளை அனுமதிக்க முடியாது – சம்பந்தன்

முல்லைத்தீவு, நீராவியடி பிள்ளையார் கோயில் வளாகத்தில் செய்த அடாவடிகளை அனுமதிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீதிமன்ற கட்டளைகளை மீறி செயற்பட்டவர்கள் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேபோல் செம்மலை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறியோரை தடுக்காமல் அதனை அனுமதித்த பாதுகாப்பு தரப்பினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முல்லைத்தீவு செம்மலையில் இடம்பெற்ற நீதிமன்ற கட்டளையை மீறிய விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் மூலம் இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like