எழுவைதீவு மீனவர்களை விடுவிக்க சிறீதரன் எம்.பி நடவடிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்றுறை, மற்றும் பருத்தித்துறைப் பகுதிகளைச் சேர்ந்த 18 மீனவர்கள் கடந்த 2019.10.03 ஆம் திகதி அதிகாலை தொழிலுக்காக எழுவைதீவு கடலுக்குச் சென்ற வேளை இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நாகபட்டினம் பொலிசாரின் ஊடாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களது இயந்திரங்கள், படகுகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களும் இந்தியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தையடுத்து கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பங்களையும், எழுவைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினரையும் கடந்த 2019.10.06ஆம் திகதி நேரடியாக சந்தித்து கலந்துரையாடிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உடனடியாகவே இந்தியத் துணைத்தூதுவர் திரு.சங்கர் பாலச்சந்திரன் அவர்களுக்கு இம்மீனவர்களின் குடும்ப நிலை மற்றும் வாழ்வாதார நிலமை, வங்கிக்கடன் போன்ற இடர்பாடுகளை குறிப்பிட்டு மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடிதம்; ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
அதனடிப்படையில் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 18 பேரையும் எதிர்வரும் 2019.10.18 ஆம் திகதி தமிழக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி அன்றைய தினமே அவர்களை விடுதலைசெய்து விமானம் மூலம் நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுப்பதாகவும், அவர்களின் விடுதலைக்குப் பின்னர் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இயந்திரங்கள், படகுகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை உரிய மீனவர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இந்திய துணைத்தூதரகம் உறுதியளித்துள்ளது
.
Share the Post

You May Also Like