தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் துணிச்சல் கோட்டாவுக்கு இல்லை: சிறிதரன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக எந்த வேட்பாளர் வெளிப்படையான, தெளிவான திட்டங்களை முன்வைக்கின்றாரோ அவருக்கு ஆதரவளிப்பது பற்றி சிந்திக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

அல்லாது விடின் எதுவுமில்லாத திறந்த வெளிக்கு தாங்கள் தள்ளப்படுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தேர்தலில் வெற்றிபெற்ற அடுத்த நாள் சிங்கள அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருந்தார். அவர்தான் 50, 60 போராளிகளை சுட்டுக்கொன்றது தானே என்ற செய்தியையும் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இவ்வளவு துணிச்சலாக சிங்கள இராணுவத்தினரை விடுதலை செய்வேன் என கூறும் அவரால் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வேன் என கூறக் கூடிய துணிச்சல் இல்லை.

அதேபோல சஜித் பிரேமதாசவிற்கு அவரின் தந்தை தமிழர் தரப்பால் கொல்லப்பட்டார் என்ற எண்ணம் அடிமனதில் உள்ளது.

அதைவிடுத்து வெளியில் வந்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வை முன்வைக்கக் கூடிய துணிச்சல் அவருக்கும் இல்லை. அவரும் ஒரு தெளிவான செய்தியை தமிழ் மக்களுக்கு கூறும் நிலையில் இல்லை” என மேலும் தெரிவித்தார்.

Share the Post

You May Also Like