தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

திருக்கோணமலை  மாவட்டத்திலுள்ள  உப்புவெளி  நாமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்கின்ற அனைத்து மாணவர்களுக்கும்  இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணியின்   ஏற்பாட்டில்  கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
புங்குடுதீவினை சேர்ந்த  சமூக ஆர்வலர்     சபாரத்தினம் கேதீஸ்வரன் அவர்களின் நிதியுதவியின் ஊடாக  இச் செயற்பாடு  மேற்கொள்ளப்பட்டது.
திருமலை நகரில்  விஜிதபுர போன்ற  சிங்கள குடியேற்ற பகுதிகளுக்கு  அண்மையில் காணப்படுகின்ற  இந்த பாடசாலையின்  உட்கட்டமைப்பு  வசதிகள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன .
நகரிலுள்ள பிரபல பாடசாலைகளை நோக்கியே  மாணவர் வளம் செல்வதால்   இவ்வாறான பாடசாலைகள் மூடப்பட்டு சிங்கள மொழி பாடசாலையாக  மாற்றப்படுவதற்கான ஆபத்துக்கள் காணப்படுகின்றன . இதனை கருத்திற்கொண்டு  இப்பாடசாலையோடு  இணைந்தவாறு  முன்பள்ளியொன்றினை  உருவாக்கும்  செயற்பாடுகளை நாம் முன்னெடுத்துள்ளதோடு  இவ்வாறான பின்தங்கிய  பாடசாலைகளை மெருகூட்டுவதில்  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்  வாலிப முன்னணியினர் அதீத அக்கறை கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வில் நேரடியாக இலங்கை தமிழரசு கட்சியின் துணைத்தலைவர்  குணாளன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
Share the Post

You May Also Like