யாழ். போதனா வைத்தியசாலையில் சி.ரி.ஸ்கானர் சேவையை ஆரம்பித்துவைத்தார் மாவை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நவீன சி.ரி.ஸ்கானர் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதனை வைபவரீதியாக இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைத்தார்.

குறித்த சேவையானது பொ.றஞ்சன் எஸ்.கதிர்காமநாதன் பி.நந்தபாலன் மற்றும் சமூக ஆர்வலர்களின் நிதிப் பங்களிப்பு மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர் கட்சித் தலைவர் சி.தவராசா, வைத்தியர்கள்  கலந்து கொண்டனர்.

Share the Post

You May Also Like