வடலியடைப்பு கலைவாணி கலைமன்றத்துக்கு சுமந்திரன் நிதியில் இன்னியம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைபடபின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமாகிய M .A .சுமந்திரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் வடலியடைப்பு கலைவாணி கலைமன்றத்துக்கு இன்னியம் பாரம்பரிய இசைக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி சனசமூக நிலையத்தினர் நாடாளுமன்ற உறுப்பினரின் மானிப்பாய் தொகுதி பிரதிநிதியும் வலி.தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளருமாகிய தி.பிரகாஷிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே நாடாளுமன்ற உறுப்பினரால் இசைக்கருவிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த இசைக்கருவிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் பிரகாஷ் கலந்து கலைமன்றத்தினரிடம் வழங்கிவைத்தார்.

Share the Post

You May Also Like