வாழ்வோம் வளம்பெறுவோம் – கட்டம் 29இல், 32குடும்பங்கள் உள்ளீர்ப்பு.

 

விஜயரத்தினம் சரவணன்

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனால் முன்னெடுக்கப்படும் வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் இருபத்தொன்பதாங் கட்டமானது 13.10.201நேற்றைய நாள், முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அவரின் மக்கள் தொடர்பகத்தில் இடம்பெற்றது.

புலம்பெயர் அன்பர்களின் பங்களிப்பில் முன்னெடுக்கப்படும் இச்செயற்றிட்டத்தின் இருபத்தொன்பதாங் கட்டத்தில் தாயகத்தைச்சேர்ந்த, முப்பத்திரெண்டு குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில்.

வாழ்வோம் வளம்பெறுவோம் என்ற பெயரிலான செயற்றிட்டமானது குறுங்கால வாழ்வுடமை ஊக்குவிப்பு நோக்கில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

குறித்த செயற்றிட்டமானது ரவிகரனால் கடந்த 17.05.2014அன்றைய நாள் முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது.

அந்தவகையில் புலம்பெயர்ந்து வாழும் அன்பரின் பணப்பங்களிப்பில் நடைபெற்று முடிந்த இருபத்தொன்பதாங் கட்டத்துடன் இது வரையில் 961குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டிருப்பதாக துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இக்கட்டத்திற்காக புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழும் திருவிணையர் செந்தூர்ச்செல்வன் உமாதேவி தம்பதியினரின் புதல்வன் பமிசன் என்பவரின் 10ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு அவர்களால் இவ்வுதவிகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந் நிகழ்வில் கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன், ஓய்வுபெற்ற கிராம அலுவலர் பரன்சோதி தெய்வேந்திரம் அவர்களும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share the Post

You May Also Like