தம்பகாமம் இந்த இளைஞர் விளையாட்டுக் கழகத்திற்கு ஸ்ரீதரனால் நிதி ஒதுக்கீடு

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்களால் தம்பகாமம் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகத்திற்கு 0.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மைதான புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தம்பகாமம் இந்த இளைஞர் விளையாட்டுக்கழக அங்கத்தவர்கள் உடைய தொடர்ச்சியான வேண்டுகோளினை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் ஊர்எழுச்சி திட்டத்தின் ஊடாக குறித்த நிதியை ஒதுக்கீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த விளையாட்டு கழகத்தினர் குறித்த நிதியை கொண்டு விளையாட்டு கழகத்தின் மைதானத்திற்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த வேலைத்திட்டங்களில் முன்னேற்றத்தின் தன்மையை தம்பகாமம் வட்டார கட்சி அமைப்பாளர் வித்தியின் வேண்டுகோளுக்கிணங்க  பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் மற்றும் உப தவிசாளர் கஜன் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர்.
Share the Post

You May Also Like