தமிழ்க் கூட்டமைப்பின் முடிவு ஓரிரு தினங்களில் வெளியீடு! – சம்பந்தன் தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி முடிவெடுள்ள நிலையில், ஏனைய இரண்டு பங்காளிக் கட்சிகளுடனும் நாம் பேச்சு நடத்தி கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஓரிரு தினங்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளோம். இந்த அறிவிப்பு அறிக்கையூடாகவும் வெளிவரும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாம் இருப்பதால் எமது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்கும் பொறுப்பு எம்மிடம் உள்ளது. அதிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கவே முடியாது. கடந்த கால வரலாறுகளைக் கருத்தில்கொண்டும் ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை அலசி ஆராய்ந்துமே எமது முடிவை எடுக்கின்றோம்” – என்றார்.

 

Share the Post

You May Also Like