சம்பந்தன் அணியின் அறிவிப்புக்கு தமிழர்கள் செவிசாய்க்கவேமாட்டர்! – மஹிந்த குழு கண்டுபிடிப்பு

“ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க இரா.சம்பந்தன் தலைமையிலான அணியினர் எடுத்துள்ள தீர்மானத்துக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் செவிசாய்க்கவேமாட்டார்கள்.”

– இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை போர்க்குற்றவாளி எனவும்,  அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தால் தமிழர்களுக்கு  நன்மையில்லை எனவும் சம்பந்தன் அணியினர் உண்மைக்குப் புறம்பான கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க முடிவெடுத்துள்ளனர்.

இந்த நிலைப்பாட்டுக்கமைய வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளைப் பிரயோகிக்க வேண்டும் எனக் கோரி சம்பந்தன் அணியினர் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளனர்.

இவர்களின் கருத்துக்களுக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் செவிசாய்க்கவேமாட்டார்கள்.

தமிழ் மக்கள் இந்த அரசுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்துள்ளனர். எனவே, அவர்களின் வாக்குகள் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராகவே விழும்” – என்றார்.

Share the Post

You May Also Like