சம்பந்தன், மாவை, சுமன் இதுவரை செய்யாதவை!

சம்பந்தன், மாவை, சுமந்திரன் ஆகியோர் யாரையும் கொலை செய்யவில்லை இதுவரை யாரையும் கொலை செய்தவர்கள் அல்லர். அவரது கரங்கள் மற்றவர்கள் போன்று என்றுமே இரத்தக்கறை படியாத கரங்கள்.

இவர்கள் மற்றவர்கள் போன்று பிழைப்புக்காக இனத்தை விற்று எம|து இனத்தை யாரிடமும் காட்டிக்கொடுத்தவர்களும் அல்லர்.

இவர்கள் தமது கட்சியை வளர்ப்பதற்காக ஏனைய ஆயுதக் குழுக்கள் போன்று மக்களையும் வர்த்தகர்களையும் மிரட்டி கப்பம் பெற்றவர்களும் அல்லர்.

இவர்கள் இங்குள்ள அரச ஒட்டுக்குழுக்களாகச் செயற்பட்டவர்கள் அல்லர். அரச ஆதரவுடன் வடக்கு – கிழக்கில் எந்தப் பெண்களையோ அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களையோ கடத்தி பாலியல் செய்தவர்களும் அல்லர்.


தமது அரசியல் சுயநலத்துக்காகத் தமக்குப் பிடிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களை அல்லது மாற்றுக் கட்சி சாந்தவர்களை எந்தக் காலத்திலும் கடத்தியோ துன்புறுத்தியோ அல்லது தேவாலயங்களுக்குள்ளும் ஆலயங்களுக்குள்ளும் பொது இடங்களிலும் வைத்துக் கொலை செய்தவர்களும் அல்லர்.

கஞ்சா, குடு கடத்தியோ அல்லது யாருடைய பெயரில் நிதியம் ஆரம்பித்து மண்கடத்தியோ எந்தவித சட்டவிரோத செயல்களிலும் இவர்கள் இதுவரை ஈடுபட்டவர்கள் அல்லர்.

 

எவரையும் பிற ஆயுத ஒட்டுக்குழுக்கள் போன்று கடத்தி காணாமல் ஆக்கவில்லை. காணாமல் ஆக்கிய அரச தலைவனையும் அவனது சகோதரனையும் தமிழ் பெண்கள் பொட்டிட்டு ஆரத்தி எடுத்து மாலை தூவி கட்டியணைத்து முத்தமிட்டு வரவேற்கின்றார்கள். ஒட்டுக்குழுக்களாக இருந்து காணாமலாக்கியவர்கள் இன்றும் உத்தமர் போன்று உலாவருகின்றார்கள். ஆனால், சம்பந்தன், மாவை, சுமந்திரனை செருப்பெறிந்தும் மண் அள்ளித் தூவியும் திட்டுகின்றார்கள்.

இவற்றை ஆற்றாதமை இவர்கள் செய்த தவறா?

Share the Post

You May Also Like