அமரர் நடராஜா இரவிராஜ் நினைவு சாவகச்சேரியில்!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா இரவிராஜின் நினைவு நிகழ்வு 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சாவகச்சேரியில் உள்ள கலாசார மண்டபத்தில் நடைபெறும்.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் ”போரின் முடிவும் போராட்டத் தொடர்ச்சியும்” என்னும் தலைப்பிலான நினைவுப் பேருரையை உலகத் தமிழர் பேரவைத் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேலும் சிறப்புiரையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனும் நிகழ்த்துவர்.

வரவேற்புரையை லயன் நிர்மலா மகேந்திரனும், ஆத்மசாந்தியுரையை வாரிவனேஸ்வரர் சிவன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கு.ஜெகதீஸ்வரக் குருக்களும், நன்றியுரையை ம.மரியபேர்ணாட்டும் வழங்குவர். விருது வழங்கல் நிகழ்வும் இடம்பெறும்.

Share the Post

You May Also Like