தமிழ் அரசுக்கட்சியின் மிக முக்கிய கலந்துரையாடல் இன்று!

இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் மிக முக்கிய கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் நடைபெறவுள்ளது.

இன்று(சனிக்கிழமை) நண்பகல் 2 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

சமகால அரசியல் கலந்துரையாடல் என்ற தலைப்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்கவுள்ளனர்.

அத்துடன், வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், கலந்துரையாடல் இடம்பெறும் இடத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்காரணமாக பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினரின் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share the Post

You May Also Like