தமிழரசுக் கட்சியின் அலுவலகம் வடமராட்சியில் திறப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகம் வடமராட்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அலுவலகமாக இந்த அலுவலகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். வடமராட்சி அல்வாய் பகுதியில் அமைக்கப்பட்ட இந்த அலுவலகத்தின் பெயர்ப் பலகையை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் திரைநீக்கம் செய்து வைத்து அலுவலகத்தையும்  உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

இந்த திறப்பு விழா நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share the Post

You May Also Like