மாமனிதர் ரவிராஜின் நினைவு பேருரை சாவகச்சேரியில்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் நினைவுப் பேருரை தென்மராட்சி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண சபையின் முன்னாள்  உறுப்பினர் கே.சயந்தன் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இந்த நிகழ்வின் முதல் நிகழ்வாக சாவகச்சேரியில் அமைந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

இந்த மலர் மாலையை தமிழ் தேசியக் கூட்ட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆகியோர் இணைந்து அணிவித்தனர். அதன்பின்னர் கலாசார மண்டபத்தில் நினைவுப் பேருரை நடைபெற்றது.

இதில் சிறப்புரையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆற்றினார். மேலும் ‘போரின் முடிவும் போராட்டத் தொடர்ச்சியும்’ என்ற தொனிப் பொருளில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவேல் உரையாற்றினார்.

இந்த நினைவுப் பேருரை நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கடசியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, துரைரட்ணம், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்ட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Share the Post

You May Also Like