மஹிந்தவிள் ஆட்சியில் காணிவிடுவிப்பு: கோத்தா சொல்கின்றமை பச்சப்பொய்!

நக்கீரன்

சிறிலங்கா பொதுசன முன்னணி வேட்பாளர் கோட்டாபய  போர் முடிந்த பின்னர் மகிந்த இராஜபக்ச ஆட்சியில் இராணுவம் கைப்பற்றியிருந்த காணியில் 90 விழுக்காடு விடுவிக்கப்பட்டு விட்டது எனச் சொல்கிறார்.  மகிந்த இராஜபக்சவின் ஆட்சி சனவரி 08 ஆம் நாள் இரவு முடிவுக்கு வந்தது.  டெயிலி மிறர் நாளேடு   கோட்டாபயவின் கூற்றின் உண்மைத்தன்மையை அறிய நல்லிணக்க வழிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம் (Secretariat for Coordinating Reconciliation Mechanisms (SCRM) மற்றும் பாதுகாப்பு அமைச்சு இரண்டையும் தொடர்பு கொண்டது.   எஸ்சிஆர்எம் வசம் இருந்த தரவுகளை ஆராய்ந்து பார்த்தது. பின்னர் அந்தத் தரவுகளை  உறுதி செய்வjற்கு பாதுகாப்பு அமைச்சை அணுகியது.   அந்த அமைச்சு அதனை உறுதி செய்தது. (To verify this claim, we consulted data published by the Secretariat for Coordinating Reconciliation Mechanisms (SCRM), as well as consulting the Ministry of Defence (MOD) to confirm the numbers provided.)

மே 18, 2009  இல் போர் முடிவுக்கு வந்தபோது இராணுவத்தின் பிடியில் மொத்தம் 118,253 ஏக்கர் காணி இருந்தது. இதில் மே 2009 –  சனவரி 2015 மட்டும் 41,659 ஏக்கர் காணி மட்டுமே விடுவிக்கப்பட்டது.  எனவே மொத்தம் 118,253 ஏக்கர் காணியில்   41,659 ஏக்கர் காணி (35.2%)    மட்டுமே விடுவிக்கப்பட்டிருந்தது!  தொண்ணூறு விழுக்காடு என்று கோட்டாபய சொன்னது – அவர் தனியார் காணியைக் குறிப்பிட்டாலும் – அது அவர் கூறிய விழுக்காட்டிலும் குறைவானதே.

Land occupied by the military in the North and East at the end of the war comprised both state land and private land. SCRM data shows that between the end of the war in 2009 and January 2015, 68.0% of occupied private land and 24.3% of occupied state land was released by the military (Exhibit 1). Overall, of the 118,253 acres occupied, 35.2% was released as at January 2015. Even if Gotabaya Rajapaksa was referring only to private land, the official figures fall well below his stated claim.

கீழே உள்ள அட்டவணை மகிந்த இராசபக்ச ஆட்சியில் விடுவிக்கப்பட்ட காணிபற்றிய தரவுகளைக்  காட்டுகிறது.

          மே 2009 – சனவரி 2015 இடையில் விடுவிக்கப்பட்ட காணி விபரம்

அட்டவணை 1

அரச காணி தனியார் காணி மொத்தம்
மே 2009 இல் முப்டைகள் வசம் இருந்த காணி 88,722 29,531 118,253
மே 2009 – மார்ச் 2015 விடுவிக்கப்பட்ட காணி 21,581 20,078 41,659
விழுக்காடு 24.3% 68.0% 35.2%
மே2009 – சனவரி 2015 வரை விடுவிக்கப்படாத காணிகள் 67,142 9,453 76,595

மூலம்: நல்லிணக்க வழிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம்

மே  2009 தொடக்கம் சனவரி 2015 வரை (ஆறு ஆண்டுகள்)  41,659 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட்டது. நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் சனவரி 2015 – மார்ச் 2019 வரை (நான்கு ஆண்டுகள்) மொத்தம் 47,604 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இதனை அட்டவணை 2  காட்டுகிறது.

சனவரி 2015 – மார்ச் 2019  இடையில் விடுவிக்கப்பட்ட காணி விபரம்

அட்டவணை 2

அரச காணி தனியார் காணி மொத்தம்
மே 2009 – சனவரி 2015 வரை விடுவிக்கப்படாத காணிகள் 67,142 9,453 76,595
சனவரி 2015- மார்ச் 2019 வரை விடுவித்த காணிகள் 41,677 5,927 47,604
மே 2009 தொடக்கம் மார்ச் 2019 வரை முப்படைகளினால் விடுவிக்கப்பட்ட காணி  63,257 26,005 89,262
மே 2009 –  மார்ச் 2019 விடுவிக்கப்பட்ட காணிகளின் விழுக்காடு  71.30% 88.06% 75.48%
விடுவிக்கப்படாத காணிகள் 25,465 3,526 28,991
விடுவிக்கப்பட்ட காணிகளின் விழுக்காடு  28.70% 11.94% 24.52%

அமைச்சர் மாரப்பன ஐநா மனித உரிமை பேரவையில் அரச மற்றும் தனியார் காணிகள்

அட்டவணை 3

அரச காணி ஏக்கர் தனியார் காணி ஏக்கர் மொத்தம் ஏக்கர்
முப்படைகளின் வசம் மே 2009 இல் இருந்த காணி 71,173 28,215 99,388
மே 2009 தொடக்கம் மார்ச் 2019 வரை முப்படைகளினால் விடுவிக்கப்பட்ட காணி 63,258 26,005 89,263
விடுவிக்கப்பட்ட காணிகளின் விழுக்காடு 88.87% 92.16% 89.81%
விடுவிக்கப்படாத காணிகள் 7,915 2,210 10,125
விடுவிக்கப்படாத  காணிகளின் விழுக்காடு 11.13 7.84 10.19

இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் விடுவிக்கப்படாத காணியின் அளவு  வேறு  படுகிறது. விடுவிக்கப்படாத காணியின் அளவு 25,991 ஏக்கர் என எஸ்சிஆர் எம்  தெரிவிக்கிறது. ஆனால் அமைச்சர் விடுவிக்கப்படாத காணியின் அளவு 10,125 ஏக்கர் மட்டுமே எனக் கூறுகிறார். தனியார் காணியை எடுத்துக் கொண்டால்  அமைச்சரின் கூற்றுப்படி இன்னும் விடுபடாத காணி அளவு 2,210 ஏக்கர் மட்டுமே. எஸ்சிஆர்எம் கொடுத்த தரவுகளின் படி  வடக்குக் கிழக்கில் 3,526 ஏக்கர் தனியார் காணி இன்னும் விடுவிக்கப் படவில்லை.

வலிகாமம் வடக்கில் சனவரி மாதத் தொடக்கத்தில் மொத்தம் 6381.5 ஏக்கர் காணி இராணுவத்தின் பிடியில் இருந்தது. அந்தக் காணியை சுவீகரிக்க இராணுவம் அறிவித்தால்களை அங்குள்ள மரங்களில் ஒட்டியது.  2015 இல் நடந்த ஆட்சி மாற்றம் காரணமாக அந்த முயற்சி தடைபட்டுப் போய்விட்டது.

வலிகாமம் வடக்கில் விடுபடாது இருந்த 6,381.5 ஏக்கர் காணியில்  ஒரு பாதி விடுவிக்கப்பட்டு விட்டது. மறுபாதி இன்னும் விடுபடவில்லை.

1990 இல் இராணுவம் மேற்கொண்ட படை நடவடிக்கையை அடுத்து  8,382 ஏக்கர் காணியை அபகரித்திருந்தது. இதனால் சுமார் 10,000 குடும்பங்களைச் சேர்ந்த 29,000 பேர் உள்ளக இடப்பெயர்வுக்கு ஆளானார்கள். இவர்களில் ஒரு பகுதியினர் இன்னமும்  நலன்புரி மையங்களிலும் தற்காலிக குடிசைகளிலும்  வாழ்ந்து வருகிறார்கள். வாழ்ந்து வருகிறார்கள் என்று சொல்வதற்குப் பதில் வறுமையிலும் ஏழ்மையிலும் உழன்று வருகிறார்கள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

இப்படி இராணுவம் அபகரித்த காணிகளில்  காணப்பட்ட வீடுகள், பள்ளிக்கூடங்கள், தேவாலயங்கள், கோயில்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றை இராணுவம் இடித்துத்தள்ளிவிட்டது. இடித்துவிட்டு அங்கே இராணுவ குடியிருப்புக்கள், நலவாழ்வு விடுதிகள், ஆடம்பர ஹோட்டல்கள், உணவகங்கள், விளையாட்டு மைதானங்கள், நீச்சல் தடாகங்கள், மாளிகைகள், புத்த கோயில்கள், போர் நினைவுத் தூபிகள் போன்றவை கட்டப்பட்டுள்ளன.

It is obvious the army is resisting release of lands to the IDPs since it has developed a vested interest in the land for purposes other than military. They are cultivating thousands of acres of land and selling the produce to the very people displaced by the army.

காணிகள் அதன் சொந்தக்காரர்களிடம் மீள்கையளிக்கப்படுவதை இராணுவம் தடுக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.  ஆயிரக்கணக்கான ஏக்கர்  காணிகளில் இராணுவத்தினர் விவசாயம், தோட்டம் செய்கின்றனர். அதில் விளையும் பொருட்களை காணிச் சொந்தக்காரர்களுக்கே விற்கிறார்கள்!  இதனால் இராணுவம் அந்தக் காணிகளை தன்னலம் காரணமாகத்  தனது பிடியில் வைத்திருக்க விரும்புகிறது.

கடந்த  சனவரி, 2019 இல் 3 விவசாயப் பண்ணைகள் உட்பட 1,201.88  ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட காணியில், கிளிநொச்சி மாவட்டத்தில் 972 ஏக்கர் அரச காணிகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 120 ஏக்கர் அரச காணிகளும் உள்ளடங்கியுள்ளன. நாச்சிக்குடா, வெள்ளாங்குளம், உடையார்கட்டுக்குளம் ஆகிய இடங்களில் சிறிலங்கா இராணுவம் நடத்தி வந்த விவசாயப் பண்ணைக் காணிகள் இதில் உள்ளடங்கியுள்ளன.

மார்ச் 2019 க்குப் பின்னர் அங்கொன்றும் இங்கொன்றாக இராணுவம் தனது வசம் இருந்த காணிகளை மக்களிடம் ஒப்படைத்துள்ளது.

ஓகஸ்ட் 18, 2019  அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் 23 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.  ஒக்தோபர் 18 முல்லைத்தீவு மாவட்டத்தில் 150 ஏக்கர் காணி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

  • கேப்பாப்புலவில் தனியாருக்குச் சொந்தமான 59.5 ஏக்கர் காணி விடுவிக்கப்படுவது பற்றி வட மாகாண ஆளுநர், இராணுவத்தினருக்கு இடையே கடந்த  20 செப்தெம்பர், 2019  கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.
  • கேப்பாப்புலவு மக்கள் 2017 தொடக்கம்  தங்கள் காணிகளை விடுவிக்குமாறு கேட்டுப்  போராடி வருகிறார்கள். கேப்பாப்புலவில் மொத்தம் 138 குடும்பங்களுக்குச்   சொந்தமான 282 ஏக்கர் காணியும் 8 பேரின் தலா 25 ஏக்கர் கணக்கில் 300 ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளும் மொத்தம் 482  ஏக்கர் காணி இராணுவம் வசம் இருந்தது. இதில் 412 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு விட்டது.  இன்னும் 70 ஏக்கர் வாழ்விடக் காணிகள் விடுபடாமல் இருக்கிறது. இந்தக் காணியில் இராணுவம் பாரிய தலைமை முகாம் ஒன்றை அமைத்துள்ளது.
  • அரச காணி 25,464 (28.71% ) ஏக்கர் மற்றும் தனியார் காணி 3,526 (11.94%) மொத்தம் 28,990 ஏக்கர் காணி (24.52%)  இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

கடந்த ஒக்தோபர் 26 இல் நடந்தேறிய எதிர்ப்புரட்சி காரணமாக காணி விடுவிப்பில் தொய்வு ஏற்பட்டது. அல்லது ஆயிரக்கணக்கான ஏக்கர் காணி விடுபட்டிருக்கும். தொடக்கத்தில்  காணி விடுவிப்பில் சனாதிபதி சிறிசேனா மெத்த ஆர்வம் காட்டினார். சம்பூரில் தமிழ்மக்களுக்குச் சொந்தமான 818 ஏக்கர் காணி கேட்வே இன்டஸ்றீஸ் என்ற நிறுவனத்துக்கு இராஜபக்ச அரசு 99 ஆண்டு குத்தகைக்கு கொடுத்திருந்தது. அதனை எல்லாம் இல்லாமல் ஆக்கி அந்தக் காணியை மீளவும் 387 தமிழ்க் குடும்பங்களிடம்  ஒப்படைத்ததில்  சனாதிபதி சிறிசேனாவின் ஒத்துழைப்பு மெச்சத்தக்கதாக இருந்தது.

அதேபோல் 237 ஏக்கர் காணியில் முகாம் இட்டிருந்த கடற்படைக் காணியும் மீட்டெடுக்கப்பட்டது. இந்தக் காணி 546  தமிழ்க் குடும்பங்களுக்குச்  சொந்தமானது. பிற்காலத்தில் சனாதிபதி சிறிசேனாவின் ஆர்வம்  படிப்படியாக குறைந்து போனது. ஒக்தோபர் 26, 2018  க்குப் பின்னர்  இல்லாது போய்விட்டது!

  • குடிமக்களுக்குப்  பல  அடிப்படை மனித உரிமைகள் இருக்கின்றன.  அதில் வாழும் உரிமை, உணவுக்கான உரிமை, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்/பேச்சுரிமைச் சுதந்திரம், மொழி உரிமை, பண்பாட்டு உரிமை, சொத்துரிமை முக்கியமானவை.
  • நொவெம்பர் 16 இல் நடக்கவிருக்கும் சனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் தமிழ்மக்களுக்குச்  சொந்தமான எஞ்சிய 28,990 ஏக்கர் (24.52%) காணிகளும் விடுவிக்கப்படும் என எதிர்பார்ப்போம்!
Share the Post

You May Also Like