கோடீஸ்வரன் வாக்களித்துள்ளார்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

Posted by Tamilcnn East on Friday, November 15, 2019

வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்  அம்பாறை ஆலையடிவேம்பு ஆர்.கே.எம்.மகாவித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு சுமூகமான முறையில் நடைபெற்று வருவதாக  செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

 

Share the Post

You May Also Like