மனோ, ஹக்கீமின் தவறான கற்பிதம்

காலம் பிந்திய ஞானம்‘ அல்லது ‘சுடலை ஞானம்‘ என்பார்கள். அதுதான் சிறுபான்மை இனத்தவர்களின் சில கட்சியினருக்கு – தரப்பினருக்கு – இப்போது கிட்டியிருக்கின்றது போலும்.

எது தங்களுக்குப் பாதுகப்பானது என்று அவர்கள் தவறாகக் கற்பிதம் பண்ணி நம்பிக் கொண்டிருந்தார்களோ அதுதான் அவர்களுக்குப் பாதுகாப்பற்றது என்பதை இப்போது காலம் பிந்தித்தான் அவர்கள் பட்டறிந்திருக்கின்றார்கள்.

அதற்கு இனி நிவாரணம் தேடுவது அல்லது நடந்த தவறைத் திருத்த முயல்வது “குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடும் வேலை‘. அல்லது “கண் கெட்ட பின்னர் கூரிய நமஸ்க்காரம் செய்வது‘ போன்றது.

மனோ கணேசன் போன்ற மலையகக் கட்சிகளின் தலைவர்களும்ஹக்கீம் போன்ற முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்த விடயத்தில் காலம் – தாழ்த்தி காலம் கடந்து – பாடம் படித்தவர்களாவர்.

இந்த நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமை குறித்து தமிழர் தேசத்துக்கு ஆரம்பம் முதலேயே தெளிவான பார்வை – உருப்படியான கணிப்பீடு – இருந்தது.

என்றோ ஒரு நாள் சிறுபான்மையினரின் உரிமைகளை – இந்தத் தீவில் அவர்களின் இருப்பியலை – காவு கொள்ளும் பிரதான காரணியாக நிறைவேற்று அதிகாரம் மாறும் என்ற கணிப்பீடு எழுபதுகளில் இந்த நிறைவேற்று அதிகார ஆட்சி முறை வந்த போதே தமிழ்த் தலைவர்களுக்கு இருந்தது. அதனால் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் – சந்தர்ப்பம் வாய்த்த போதெல்லாம் – அந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்துக் கட்டுவதற்காகத் தமிழர் தேசிய இனம் தொடர்ந்து குரல் எழுப்பி வந்திருக்கின்றது.

ஆனால்இந்த ஆட்சி முறை ஒழிப்புக்கு தெற்கு வாழ் சிறு பான்மையினரிடமிருந்து ஆரோக்கியமான வரவேற்புக் கிடைக்க வில்லை.மனோ கணேசன்ரவூப் ஹக்கீம் போன்ற தலைவர் கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீடிக்க வேண்டும் என அடித்துக் கூறினர்.

அந்த ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்காகத்தான் சிங்களத் தலைவர்கள் தெற்கில் பரந்து வாழும் சிறுபான்மை மக்களைத் தேடி வருகின்றனர். ஆகையால்அந்த முறைமை நீடிக்கப்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் புத்திபூர்வ வசனமாக இருந்தது.

2015 இல் புதிய ஜனாதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்ட பின்னர்புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதில் கூட இந்த நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் எத்தனங்கள் முன் நகர்த்தப்பட்டன.

எனினும்மனோ கணேசனும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமும் அந்த எத்தனத்ததைக் கடுமையாக எதிர்த்து நின்று தடுத்தனர்.

ஆனால்இப்போது என்ன நடந்திருக்கின்றது?

இந்த நாட்டின் சிறுபான்மையினரான தமிழர்கள்முஸ் லிம்கள்மலையகத் தமிழர்கள் எல்லோரையும் அடியோடு ஒதுக்கித் தள்ளி வைத்து விட்டு பெளத்தசிங்களவர்கள் தனித்து நின்றே ஆட்சியில் இருக்கும் அரசை வீட்டுக்கு அனுப்ப முடியும்புதிய நிறைவேற்று அதிகார ஜனாதிபதியையும் அவரது அரசையும் ஆட்சிக்குக் கொண்டு வர முடியும் என்பதை எல்லாம் தமிழர்முஸ்லிம் தலைவர்களுக்கு ஐயந்திரிபற எடுத்துண்ர்த்தியிருக்கின்றார். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல்.அதுவும் தொத்துப் பொறியில் அல்லகொஞ்சநஞ்ச வாக்குகள் வித்தியாசத்தில் அல்லசுமார் பதின்மூன்று லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ஸ்திரமான அரசியல் மாற்றம் ஒன்றை பெளத்தசிங்களவர்கள் மட்டும் ஒன்றுபட்டு நின்று ஏற்படுத்த முடியும் என்ற பாடத்தை உறைப்பாக – சாட்டை அடியாக – இந்தத் தேர்தல் மூலம் உணர்த்தியிருக்கின்றனர் சிங்களவர்கள்.

தங்களுடைய விடுதலைப் போராட்டத்தை – உரிமைப் போராட்டத்தை – ஆயுத வழியில் மிக மோசமாகமிகக் கோரமாகமிகக் கொடூரமாகமிகக் குரூரமாக – அழிப்பதற்கான அரசியல்இராணுவத் தலைமைத்துவத்தை ஈவிரக்கம் பார்க்காமல் வழங்கியது இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும்அதிகார்ததை ஒரே இடத்தில் குவிக்கும் இந்த ஒழுங்கமைப்புத்தான் என்பதை அடையாளம் கண்டுஅதன் காரணமாக வாய்ப்புக் கிடைக்கும் போது அதனை ஒழித்துக்கட்டி நாடாளுமன்றுக்குப் பதில் கூறக் கூடிய பிரதமர் தலைமையிலான ஆட்சி முறையை ஏற்படுத்த முயலுவோம் என்று தமிழர் தரப்பு திரும்பத் திரும்ப வலியுறுத்தியது. இருந்தபோதிலும் மனோ கணேசனுத்ஹக்கீம்மும் அவர்களுடன் சேர்ந்த தலைவகளும்தான் முட்டுக் கட்டை போட்டு அந்த முயற்சிகளுக்கு ஆப்பு வைத்தனர். அவற்றை முறியடித்தனர்.

தாம் காப்பற்றிப் பேணிய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் ஜனாதிபதி பதவியைத் தெரிவு செய்வதில் சிறுபான்மையினரின் பங்களிப்பின் சீத்துவம் யாது என்பதை நடந்து முடிந்த தேர்தல் மனோ கணேசன்ஹக்கீம் கோனற தலைவர்களுக்கு உறைப்பாக – சூடான பாடமாக – உணர்த்தியிருக்கும் என நம்பலாம்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட முயற்சிகளை முறியடித்த பாவத்துக்குஇப்போது படித்துக் கொண்ட பட்டறிவுக்கு அமையஇனி ஒரு தடவை அப்படி நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கும் வாய்ப்பு ஏற்பட்டால்அல்லது அதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டால்மனோ கணேசன்ஹக்கீம் போன்ற தலைவர் வாயைப் பொத்திக் கொண்டு அடங்கியிருக்க வேண்டும்.

அதுதான்இந்த முறைமையை ஒழிக்க விடாமல் தாம் செய்த பாவத்துக்கு அவர்கள் செய்யும் பாவ விமோசனமாக இருக்கும்.

(நமது பார்வை – காலைக்கதிர் 24, 2019

Share the Post

You May Also Like