யாழ் மாநகரசபை 10ஆம் வட்டாரத்தில் மாநகரசபை உறுப்பினர் கௌரவ எம்.எம்.எம். நிபாஹிர் அவர்களின் ஏற்பாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு சிரமதானப் பணிகள் கடந்த (30) முன்னெடுக்கப்பட்டது.
இச் சிரமதான நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன், டெங்கு தொற்றிலிருந்து பாதுகாக்க முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் சிறப்புரை ஒன்றினையும் ஆற்றியிருந்தார்.
இந் நிகழ்வில் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித்திட்டங்களும் ஏற்பாட்டுக் குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ் விசேட சிரமதான நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர்கள், கிராம சேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், 10ஆம் வட்டார முதியோர் சங்கப் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.