இயக்கச்சி விநாயகபுரத்திலல் சிறுவர் பூங்கா அமைப்பதற்கு சிறீதரனால் நிதி ஒதுக்கீடு

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் அமைந்துள்ள இயக்கச்சி விநாயகபுரம் கிராமத்திற்கு சிறுவர் பூங்கா அமைப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் அரை மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ளது.

கிராம மக்களின் தொடர்ச்சியான வேண்டுகோளினை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் குறித்த நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது.
குறித்த நிதியைப் பயன்படுத்தி சிறுவர் பூங்கா விற்கான சுற்றி வேலி அமைக்கப்பட்டதுடன் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களும்  பொருத்தப்பட்டு பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டங்களை பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் உப தவிசாளர் கயன்  உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்.
Share the Post

You May Also Like