திருக்கோவில்,பொத்துவில் பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் கோடீஸ்வரன் எம்.பி.

திருக்கோவில், தம்பிலுவில், விநாயகபுரம் , தாண்டியடி, உமிரி, மணல்சேனை, கோமாரி ஆகிய பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை அம்பாறை மாவட்ட தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள் இன்று நேரில் சென்று வெள்ளத்தினால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் மக்களின் தேவைகளை கேட்டறிந்துகொண்டார்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினருடன் திருக்கோவில் பிரதேச செயலாளர், திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர், திருக்கோவில் பிரதேசசபை உறுப்பினர்கள் மேலும் பொத்துவில் பிரதேசசபை உறுப்பினர்களும் நேரில் சென்று வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை அறிந்துகொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் நேற்றும் கல்முனை, அக்கரைப்பற்று, காரைதீவு ஆகிய பிரதேசங்களில் அதிகம் பாதிப்புக்குள்ளாகி இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவர்களைப் பார்வையிட்டபின் அவர்களுக்கு உலர் உணவு, மதியபோசனம், மருந்துப்பொருள்கள் என்பன வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like