காணி அபகரிப்பிற்கு எதிராக பூசாரியார் குளம் மக்கள் போராட்டம்!

காணி அபகரிப்பிற்கு எதிராக மன்னார் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பூசாரியார் குளம் கிராம மக்கள் நேற்று(வியாழக்கிழமை) எதிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

பூசாரியார் குளம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு சொந்தமான பெருந் தொகையான காணிகளை அயல் கிராமமான மதீனா நகர் கிராம மக்கள் அபகரித்து வந்த நிலையிலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது அப்பகுதியில் குறித்த இரு கிராம மக்களுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இப்போராட்டத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ல்ஸ் நிர்மலநாதன், மற்றும் சிவமோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடினர்.

பூசாரியார் குளம் கிராம மக்களுக்கு சொந்தமான சுமார் 150 இற்கும் அதிகமான ஏக்கர் காணியில் உள்ள காட்டு நிலப்பரப்பு இவ்வாறு எல்லைக்கற்கள் போடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மடு பிரதேசச் செயலாளர் குறித்த பகுதியில் காணி தொடர்பாக மேற்கொண்டு வந்த அனைத்து நடவடிக்கைகளையும் இடை நிறுத்தியுள்ளார்.

தொடர்ந்து மடு பொலிஸார் மற்றும் வன வள திணைக்கள அதிகாரிகளும் குறித்த பகுதிக்குச் சென்று காடுகள் அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share the Post

You May Also Like