வேலணையில் மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு!

ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் , கவிஞருமான சு. வில்வரெத்தினம் அவர்களின் 13 வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் வறுமைக்கோட்பாட்டுக்குட்பட்டோருக்கான உலருணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் புங்குடுதீவு நண்பர்கள் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது .

1991 ல் இடம்பெற்ற இடப்பெயர்வின் பின்னர் புங்குடுதீவில் ராணுவ முற்றுகைக்குள் அகப்பட்டு வாழ்ந்திருந்த சில நூறு குடும்பங்களின் வாழ்வுக்காக அங்கேயே வாழ்ந்து 1994 ல் திருக்கோணமலைக்கு இடம்பெயரும் வரை தன்னை அர்ப்பணித்தவரே மறைந்த முற்போக்கு சிந்தனையாளர் சுப்ரமணியம் வில்வரெத்தினம் அவர்கள் . இந்நிகழ்வில் 30 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் , 15 குடும்பங்களுக்கு உலருணவு பொருட்களும் வழங்கிவைக்கப்படிருந்தன . திரு . ஞானமூர்த்தி ஞானதுரை ( 16500 ரூபாய் ) , திரு. கருணாகரன் நாவலன் ( 15000 ரூபாய் ) , திரு . கருணாகரன் குணாளன் ( 10000 ரூபாய் ) ஆகியோரின் நிதியுதவி மூலம் இவ் உதவித்திட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது .

Share the Post

You May Also Like