தேசிய கீதத்தை இரண்டு மொழியில் இசைப்பது நல்லிணக்கத்தைப் பாதிக்கும்! இராசாங்க அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன்!

(பிரபல எழுத்தாளர் லூசியன் கருணநாயக்க ஆங்கிலத்தில் எழுதிய இந்தக் கட்டுரை The Island  நாளேட்டின் சனவரி 03, 2020 பதிப்பில் வெளி வந்தது. சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம் பாடப்படும் என இராசாங்க அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அவர்கள் எடுத்துள்ள முடிவு நாட்டை அரசியல்வாதிகள் எப்படிக் குட்டிச் சுவராக்குகிறார்கள் என்பதை கட்டுரையாளர் புட்டுக்காட்டுகிறார். நேர்பட எழுதக் கூடியவர்கள், சிந்திக்கக் கூடியவர்கள் சிங்களத் தரப்பிலும் இருக்கிறார்கள் என்பதற்கு இந்தக் கட்டுரை சான்று பகருகிறது.  தமிழாக்கம் நக்கீரன்)

நாங்கள் புத்தாண்டில் களமிறங்குகிறோம். நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஜனாதிபதியால் திறக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அரசியல் ஒரு புதிய ஊசலாட்டத்திற்குச் செல்லக்கூடும். இந்த  அரசாங்கத்திற்கு சபையில் முறையான பெரும்பான்மை இல்லை.  இதில் இன்னொரு அரசியல் பாடலும் உள்ளது – தேசிய கீதம்.

 

ஜனாதிபதி  கோட்டபய இராசபக்ச, அனுராதபுரத்தில் பதவியேற்றபோது  நாட்டின் சிங்கள பவுத்த  பெரும்பான்மையினரின் வாக்குகளால் தான் வெற்றி ஈட்டியதை ஒப்புக் கொண்டார். மேலும் அவர் நாட்டின் ஒற்றுமைக்குச்  செயல்படப் போவதாகவும் கூறினார். ஒற்றுமைக்கான உறுதிப்பாட்டின் இந்த அறிவிப்புக்குப் பல வாரங்களுக்குப் பிறகு நாங்கள் மீண்டும் மற்றொரு தேசிய கீதம் பற்றிய விவாதத்தின் மத்தியில் இருக்கிறோம்.

இந்த ஆண்டு சுதந்திர கொண்டாட்டங்களில் தமிழில் தேசிய கீதம் பாடுவதை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுதந்திர தினக்  கொண்டாட்டத்தைக் கையாளும் அமைச்சர் ஜனக பண்டார  தென்னக்கோன்  தெரிவித்தார். தேசிய கீதம் இரண்டு மொழிகளில் பாடப் பட்டால், இலங்கையில் இரண்டு இனங்கள் இருக்கின்றன என்பதை அது குறிக்கும் என்று அவர் பிபிசியிடம் கூறும்போது அவரது சிந்தனையில் ஒரு விசித்திரமான திருப்பம் உள்ளது போல் தெரிகிறது. சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லீம் மக்கள் இலங்கையில் ஒரே  இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால்  சிங்களத்தில் கீதம் பாடுவதற்கான முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிடுகிறார். அவர் தேசத்துக்கும்  இனத்துக்கும் இடையில் உள்ள வித்தியாசம் பற்றி குழப்பம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது.  ஆனால் அதுதான் இன்றைய அரசியலின்  போக்கு ஆகும்.  தேசிய கீதத்தை இரண்டு மொழியில் இசைப்பது நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்றும், இந்தியாவில்  தேசிய கீதம் ஒரு மொழியில் மட்டுமே பாடப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறுகிறார்.


 

இந்தியாவை உதாரணம் காட்டுவதில் இருந்து நாம் விடுபட வேண்டும். இந்தியாவுடனான ஒரு நீண்ட வரலாறு எங்களிடம் உள்ளது. மேலும் ஏராளமான அரசியல் புரிதலும் நலன்களும் உள்ளன. பல இந்தியப் பாரம்பரியத்தை நாங்கள் பின்பற்றுகிறோம்.  தேசிய கீதத்தைப் பொறுத்தளவில்  ஆம் ஜன கண மன வங்காளி மொழியில் பாடப்படுகிறது. இது இரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்டது. இது இந்தியாவின் நூற்றுக்கணக்கான மொழிகளில்  வங்காள மொழி இன்னும் ஒரு சிறுபான்மை மொழியாக இருக்கிறது. அவ்வளவுதான்.

பார்க்கலாம் இந்த தன்மையோடு இந்தியா இல் வரைதல் அகலும். நாம் கூட அரசியல் புரிதல் மற்றும் நலன்களை இந்தியா இணைந்து ஒரு நீண்ட வரலாறு மற்றும் நிறைய இல்லை. பல இந்தியப் பாரம்பரியத்தை நாங்கள் பின்பற்ற உள்ளன. தேசிய கீதம் என, ஆமாம் ‘ஜன, கண, மனா’ ஒரு மொழியில் பாடப்படுகிறது. இந்தி – ஆனால் அது இந்தியாவின் ஆட்சி மொழியாக அல்ல. அது பெங்காலி மொழியிலும் அது மொழிகளை இந்தியாவின் நூற்றுக்கணக்கான மத்தியில் இன்னும் ஒரு சிறுபான்மை மொழியாக இருப்பதே நடக்கும் இது ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் எழுதப்பட்டது.

தேசிய கீதத்தை முக்கிய உத்தியோகபூர்வ மொழியில் பாடுவதை விடுத்து சிறுபான்மை மொழியில் பாடுவது  நல்லிணக்கத்தை உருவாக்கி, தேசிய ஒற்றுமையை அடைய உதவும் என்பதை அமைச்சர் தென்னக்கோன் ஏற்றுக்கொள்வாரா?

தேசிய கீதம் குறித்து அரசாங்கத்திற்குள் அமைச்சரவை மட்டத்தில் ஒரு விவாதம் நடப்பதை அறிந்து ஒருவர் மகிழ்ச்சியடையலாம். அமைச்சரவை அமைச்சர் தென்னக்கோன் ஒரு மொழி – சிங்கள மொழியில்  மட்டுமே – தேசிய கீதம் பாட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் போது, சிங்களம் மற்றும் தமிழ் இரண்டிலும் பாடுவது சிறந்தது என்று இராசாங்க  அமைச்சர் வாசுதேவா நாணயக்காரா தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டங்களில் சிங்களம் மற்றும் தமிழ் இரண்டிலும் தேசிய கீதம்  பாடுவதற்கான முடிவை அவர் பாராட்டினார். மேலும் பிரபாகரனைத் தவிர வேறு யாராலும் தமிழில் தேசிய கீதம் இசைப்பதை  தடை செய்யவில்லை என்பதையும்  நினைவு படுத்தினார்!

தமிழில் தேசிய கீதத்தைக் கேட்க விரும்பாதவர்கள், சிங்கள அரசின்  மொழிபெயர்ப்பு தேசிய கீதத்துக்குப் பதிலாக ஒரு தனித் தமிழ்த் தேசத்தையும் மாநிலத்தையும் – அதன் சொந்த தேசியப் பண்ணையும் –  பற்றிய பிரபாகரன் சிந்தனையுடன் உடன்படுகிறார்களா?  இதற்கான பதிலை அறிவது சுவாரஸ்யமானது.

உண்மையான தேசிய ஒற்றுமையின் அடிப்படையில் இந்த விவாதம் தொடரட்டும்.  இது குறித்து ஒரு தெளிவான முடிவு எடுக்கப்பட வேண்டும். இது தேசிய கீதத்தின் தமிழ்ப் பதிப்பை அரசியலமைப்பு ரீதியாக ஏற்றுக்கொள்வது, அதனைத் தேசத்தின் தந்தை டி.எஸ் சேனநாயக்க தலைமையிலான அமைச்சரவை 1951 இல் ஏற்றுக்கொண்டது குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும்.   பிரிவினைவாதப்  போர் வெடிக்கும் வரை –  பல ஆண்டுகளாக வடக்கு மற்றும் கிழக்கில் அது பாடப்பட்டது. மற்றும் 2015 முதல் இரு மொழிகளிலும் சுதந்திர தின கொண்டாட்டங்களில் அது பாடப்பட்டது.

தேசிய கீதத்தின் திருப்பங்களும் சுற்றுக்களும் இலங்கையில் வேகமாக விரிவடைந்து வரும் நவீன மற்றும் பகுத்தறிவு சிந்தனையைக் கேலி செய்யும் மற்றொரு சூழ்நிலையையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன. இது ஜோதிடம் மீதான அதிதீத  நம்பிக்கையும், இராசிகள் பற்றிய  சிந்தனையின் பரவலும் ஆகும். எங்கள் தேசிய கீதத்தின் இசையமைப்பாளர், அசல் “நமோ, நமோ மாதா” ஆனந்த சமரக்கோன் ஜோதிட சிந்தனையால் தற்கொலைக்கு இட்டுச் செல்லப்பட்டார்.  இது தேசிய கீதத்தை ‘நமோ, நமோ, மாதா’ என்பதிலிருந்து  இன்று பாடப்படும் ‘இலங்கை மாதா’ என்று மாற்றத்துக்கு வழிவகுத்தது.

இன்று “நமோ நமோ” என்ற முதல் சொற்கள் தவறான அல்லது மோசமான ‘கண’ அல்லது ஜோதிடக் கணக்கீட்டைக் கொண்டிருந்தன என்ற பெருமளவில் ஊக்குவிக்கப்பட்ட நம்பிக்கையின் காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்தது என்பது இன்று எத்தனை பேருக்குத் தெரியும்?  இது நாட்டிற்குப் பெரும் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தியது எனப் பலர் நினைத்தார்கள். இது பற்றிய விவாதம் 1956 இல் ‘சங்கத்தினர், வைத்தியர்கள், ஆசிரியர்கள், கமக்காரர்கள், தொழிலாளர்கள்  ஆகியோர் அடங்கிய  ‘பஞ்ச பலய’  எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க மற்றும் எஸ்.எல்.எஃப்.பி – எம்.இ.பி. ஆகிய கூட்டணியை  ஆட்சிக்குக் கொண்டுவந்தது.  பாரிய வேலைநிறுத்தங்கள், வகுப்புவாத வன்முறை மற்றும் வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் தீ போன்ற பல இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டன. இதனால் தேசிய கீதத்தில் உள்ள  அமங்கலமான சொற்களை மாற்ற வேண்டும் என்ற வேண்டுகோள்கள் அதிகரித்தன.  1959 ஆம் ஆண்டில் பிரதமர் பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்ட போது இந்த  வேண்டுகோள்கள்  அதிக வலிமையைப் பெற்றன. 1960 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் வெற்றியின் பின்னர், திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக பதவியேற்ற பின்னர், மார்ச் 1961 இல்,  தேசிய கீதம் “ஸ்ரீலங்கா மாதா” ‘ என மாற்றப்பட்டது. இதன் மூலம்   சோதிட மூடநம்பிக்கைக்கு உத்தியோகபூர்வ ஒப்புதல் அளிக்கப்பட்டது. அது  2020 க்குள் நுழையும் போது அதன் செல்வாக்கு  தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

முப்பது  ஆண்டுகால பிரிவினைவாதப் போரில் தேசம் சந்தித்த பெரும் இழப்பு மற்றும்  பல வெள்ளப் பெருக்குகள்  மற்றும் இயற்கைப் பேரழிவுகள், அன்றிலிருந்து நாம் இன்றுவரை சந்தித்த மிகப்பெரிய பொருளாதார தோல்விகள் காரணமாக  ‘ஸ்ரீலங்கா மாதா’ எனத் தொடங்கும் தேசிய கீதத்தில்  சோதிட  இராசிகள் மற்றும்  பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் ஏன் தேசிய கீதத்தில் மேலும் மாற்றங்கள் செய்யப்படவில்லை என்பது அதிசயமாக உள்ளது!  இது எதிர்கால அரசியல் ஏய்ப்புக்கு உதவக் கூடும்.

ஆனந்த சமரக்கோன், கிறிஸ்தவ பெற்றோருக்குப் பிறந்தவர்.  எகோடகாஜ் ஜார்ஜ் வில்பிரட் அல்விஸ் சமரக்கோன் என்ற பெயரோடு ஒரு கிறிஸ்தவராக வளர்ந்தவர்.  பின்னர் கோட்டை கிறிஸ்தியன் கல்லூரியில் படித்தவர்.  அதே கல்லூரியில்  கலை மற்றும் இசை ஆசிரியராக இருந்தார். இசை மற்றும் கலை மீதான ஆர்வத்துடன் இருந்த அவர் வங்காளத்திலுள்ள தாகூரின்  ‘சாந்திநிகேதன்’  பள்ளியில் சேர்ந்து அங்கு புகழ்பெற்ற ஆசிரியர்களின் கீழ் கலை மற்றும் இசை இரண்டையும் பயின்றார். படிப்பை முடிக்காமல் திரும்பி வந்து காலியில் உள்ள மஹிந்தா கல்லூரியில் ஆனந்த சமரக்கோன் என்ற பெயரோடு பணியில் சேர்ந்தார்.

தேசிய கீதத்தின் இசையமைப்பாளருக்கு  அரசாங்கம் ரூ.2,500 யை  அதன் பதிப்புரிமைக்குக் கொடுத்தது. ஆனால் அந்தப் தேசிய கீதப் புத்தகத்தை வெளியிட்ட  வெளியீட்டாளருக்கு அவர் ஏற்கனவே பதிப்புரிமையை  மாற்றிக் கொடுத்து விட்டார்.  ஏனெனில்  தேசிய கீதப் புத்தகத்தை அச்சிட்ட கூலியை  அந்த அச்சுக் கூடத்துக்கு  அவரால் செலுத்த முடியவில்லை.

ஏப்ரல் 5, 1962 அன்று ஆனந்த சமரக்கோன்  இறந்து கிடந்தார். தூக்க மாத்திரைகள் அதிகமாக உட்கொண்டதால் அவர் இறந்திருந்தார். அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் டட்லி சேனநாயக்கக்கு எழுதிய ஒரு கடிதம்  அவரது மேசையில் காணப்பட்டது. அதில் அவரது  தேசிய  கீதம் எவ்வாறு சிதைக்கப்பட்டு விட்டது என்பதையிட்டு முறைப்பட்டுக் கொண்டார்.

தேசிய கீதத்தை அழித்தது மட்டுமல்லாமல், அதன் இசையமைப்பாளரின் வாழ்க்கையையும் அழித்துவிட்டது. நான் விரக்தியில் இருக்கிறேன். எனது உள்ளம் உடைந்துவிட்டது.  இதுபோன்ற விடயங்கள் நடக்கும் ஒரு நாட்டில் ஒரு  தாழ்மையான இசையமைப்பாளர் வாழ்வது ஒரு துரதிர்ஷ்டம்.  அதைவிட மரணம் விரும்பத்தக்கது”.

தேசிய கொண்டாட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அரசியலமைப்பு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிகளில்  தேசிய கீதம் பாடப்பட வேண்டுமா என்ற விவாதம் தொடர்கையில், நாடு ஜோதிடம் மற்றும் இராசிகளின் செல்வாக்கு சமூக முன்னேற்றம் குறித்த சிந்தனையின் கீழ் ஆழத்திற்கு தொடர்ந்து நகர்கிறது.  அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளின் மணிகட்டை வெள்ளை, மஞ்சள், சிவப்பு மற்றும் பிற வண்ண நூல்களால் கட்டப்பட்ட ‘பிரித் நூல்’ மற்றும் தெய்வங்களின் சக்தி,  சக்திவாய்ந்த அரசியல்வாதிகளின் விரல்களில் உள்ள மோதிரங்கள் தெய்வங்களின் ஆசீர்வாதங்களை அல்லது பலத்தை ஈர்க்கும் இரத்தினங்களால் ஏற்றப்படுகின்றன.  அதே நேரத்தில் பல்வேறு  கோயில்களில் பேய்களுக்கு பிரசாதம்,  ஏராளமான தேங்காய் உடைத்தல்  மற்றும் பல பேய் சடங்குகள் அதிகரித்தவண்ணம் உள்ளன.

தேசிய கீதம் குறித்த விவாதத்தின் அவசியத்துக்கு இடையில்  ஒவ்வொரு அமைச்சரும் முக்கிய அதிகாரிகளும் கடமைகளை ஏற்றுக்கொள்வதோடு வரும் புத்திசாலித்தனமான பவுத்த  சிந்தனையின் பெரும் கேலிக்கூத்து;  ஆவணங்களில் கையெழுத்து இடும்போது இடம்பெறும் ஆசீர்வாதங்களின் கேலிக்கூத்து ஸ்ரீலங்கா எங்கு செல்கிறது? எனக் கேட்கத் தோன்றுகிறது. ஒரு தாழ்மையான இசையமைப்பாளருக்கு இதுபோன்ற துரதிர்ஷ்டம் ஏற்பட்ட ஒரு நாட்டில் மரணம் விரும்பத்தக்கது என்று ஆனந்த சமரக்கோன் கூறினார். ஒரு இசையமைப்பாளர், அவரது வார்த்தைகள் நாட்டைப் பிரிக்கவில்லை. ஆனால் ஒற்றுமையின் வலிமையையிட்டு  நம் அனைவரையும் பாட வைத்தது.

தேசிய கீதம் குறித்த அரசியல் சீரமைப்புகள் பற்றிய விவாதம், சத்தியம் மற்றும் நேர்மையின் வலிமையை உயர்த்துவதற்கான உத்வேகம் மற்றும் கல்வியைக் கொடுக்கும் ஒரு தேசத்தின் சிறிய முன்னேற்றத்தையும் காட்டவில்லை. மாறாக  சூனியம் மற்றும்  சோதிட மோசடி மற்றும் மதவெறி  ஆகியவற்றில் சிக்கியுள்ள  ஏமாற்று  அரசியல் புள்ளிகளின் பிடியிலிருந்து  விலகியிருக்க வேண்டும். றது .

(தேசிய கீதத்தின் வரலாற்றைக் குறித்த ஆராய்ச்சிக்கு எழுத்தாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் அவர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்).(http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=216456)

 

Share the Post

You May Also Like