இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்! இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க!

நக்கீரன்

னைய இனத்தவர்களோடு ஒப்பிடும் போது தமிழர்கள்  கொடுத்து வைத்தவர்கள். மற்ற இனத்தவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு புத்தாண்டுகளுக்கு மேல் இல்லை. பெரும்பான்மை கிறித்தவ மக்களுக்கு சனவரி முதல் நாள்தான் மட்டுமே புத்தாண்டு ஆகும்.  இயேசு  கிமு 8 க்கும் 2 க்கும் இடையே  பெத்லகேம் நகரில் பிறந்தார். யேசு கிறித்து பிறந்த நாளை கிறித்தவர்கள் டிசெம்பர் 24 இல் கொண்டாடினார்கள். இயேசுவின் பிறப்பை மையமாக வைத்தே கிமு மற்றும் கி.பி. என்பன பிரிக்கப்பட்டாலும் இயேசுவின் பிறப்பு கிமு காலப்பகுதியில் நடைபெற்றுள்ளது என்பது ஆய்வாளர்கள் கருத்தாகும். இதுவே  நத்தார் பண்டிகையாகும். ஆனால் ஆண்டின் துவக்கத்தை கிறித்தவர்கள்  சனவரி 01 இல் வைத்துக் கொள்கிறார்கள்.  இன்றைய காலக்கணிப்பு (ஆண்டுமாதங்கள்வாரங்கள்) உரோமர் மற்றும் கிரேக்க இனத்தவர்கள் உலகத்துக்கு வழங்கிய  கொடை. ஆகும்.Image result for பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

கிறித்தவர்களுக்கு சனவரி முதல்நாள் எப்போதுமே புத்தாண்டின் தொடக்கமாக இருந்ததில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுவரை யேசு பிறந்த டிசெம்பர் 25 ஆம் நாளே புத்தாண்டின் தொடக்கமாக இருந்தது.

கிறித்துவ நாட்காட்டியின் அடிப்படையிலேயே சனவரி முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்காட்டி காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு ஒழுங்குபடுத்தி வரப்பட்டிருக்கிறது. இன்று சனவரி முதல் நாள் அனைத்துலகத்துக்கும் பொதுவான புத்தாண்டு என்றை தகைமையைப் பெற்றுள்ளது.

உரோம சக்கரவர்த்தி யூலியஸ் சீசர் அவர்கள் கிமு  45 ஆம் ஆண்டு ஒரு புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். அதற்கு யூலியன் நாட்காட்டி என்று பெயர். அதற்கு முன்னர் ஒரு ஆண்டில் பத்து மாதங்களும் 304 நாட்கள் மட்டுமே இருந்தன. கிறித்துவ பாதிரிமார்கள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நாட்காட்டியில் உள்ள நாட்களையும் மாதங்களையும் கூட்டியும் குறைத்தும் சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினார்கள். சில சமயங்களில் கையூட்டு வாங்கிக் கொண்டு ஆண்டை நீட்டியும் குறைத்தும் காட்டினார்கள்!

யூலியஸ் சீசர் அந்தக் குளறுபடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தனது பெயரில் ஒரு மாதத்தைக் கூட்டினார். அவர் கணித்த நாட்குறிப்பு கிபி 1,500 வரை பயன்பாட்டில் இருந்தது. கிமு 45ஆம் ஆண்டில் நாட்காட்டியைத் திருத்தி அமைத்ததால் அந்தக் குழப்ப ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது.

அதன் பின் கிறகோறியன் (Gregorian) நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது.  அதனைப் போப்பாண்டவர் கிறகோறியன் 1582 இல் கொண்டுவந்தார். ஆனால் கிபி 1900 வரை பழைய நாட்காட்டியைக் கிரேக்கம்உருசியா போன்ற நாடுகள் கைவிடவில்லை. இன்றும் உருசியாவின் பழைமைவாத தேவாலயங்கள் யூலியன் நாட்காட்டியைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. 

நபிகளாரின் காலத்தில் ஹிஜ்ரி போன்ற எந்தவிதமான  ஆண்டுக் கணக்கும் வழக்கத்தில் இருக்கவில்லை. முஹரம் தொடங்கி துல்ஹஜ் வரையிலான 12 அரபு மாதப் பெயர்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. இறுதியில் அலி (ரலி) அவர்களின் யோசனை வழிமொழியப்பட்டு ஹிஜ்ரத்’ தினத்தை ஆண்டுக் கணக்காகக் கொள்ளவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

நபிகளாரும்தோழர்களும் தங்களைக் தற்காத்துக் கொள்வதற்காக கிபி 622  ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி மக்காவில் இருந்து மதீனா நோக்கிப் பயணம் செய்தார்கள். இதுவே இஸ்லாமிய ஆண்டின் (ஹிஜ்ரி ஆண்டு) தொடக்கம் என முடிவானது. முஹரம் மாதத்தின் முதல் நாளே இஸ்லாமியர்களின் புத்தாண்டானது. இஸ்லாம்  இரண்டு நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக ஆக்கியுள்ளது. தேவையற்ற கொண்டாட்டங்களை இஸ்லாம்  தடை செய்கின்றது.

இறைவனின் தூதரான இப்றாகீம்  நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாகஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய  சந்திரமானக் கணக்கு நாட்காட்டியின்  பன்னிரண்டாவது மாதமானது துல் ஹஜ் மாதம் (Dul Haji) 10 ஆம் நாள்  கொண்டாடப்படுகின்றது.  மற்றது இஸ்லாமிய சந்திரக் கணக்கு நாற்காட்டியின் ஒன்பதாவது மாதமாக ரமழான் மாதம்.  இந்த மாதம் முழுவதும் நோன்பு நோற்குமாறு இஸ்லாம் முஸ்லிம்களைப் பணித்துள்ளது.Image result for பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

பவுத்தர்கள் புத்தர்  பரிநிருவாணம் (மறைந்த) அடைந்த ஆண்டில்  இருந்து ஆண்டுகளைக் கணிக்கிறார்கள். வேறுபாடுகள் காணப்பட்டாலும் புத்தர் பரிநிருவாணம்  அடைந்த நாள் கிமு 544 எனக் கணிக்கப்படுகிறது. இந்து  நாட்காட்டி (பஞ்சாங்கம்) போலவே பவுத்த நாட்காட்டியும் ஒரு மாதத்தை இரண்டாகப் பிரித்துள்ளார்கள்.  முதல்  இரண்டு வாரத்தை வளர்பிறையாகவும் அடுத்த இரண்டு வாரத்தை தேய்பிறையாகவும் கணக்கிடுகிறார்கள்.  இந்து நாட்காட்டி போலவே பவுத்தர்கள்  காலக் கணிப்பு புவி மற்றும் நட்சத்திரங்களை மையமாகக் கொண்டு சூரியனை சுற்றிவரும் காலம் ஓரு நட்சத்திர ஆண்டு (sidereal year) எனக் கணிக்கிறார்கள்.

பவுத்தமத நாட்காட்டி இந்து மத நாட்காட்டிக்கு ஒப்ப இருப்பதே தமிழர் – சிங்களவர் இருசாராரது புத்தாண்டும் சித்திரை முதல்  நாளில் ஒரே நேரத்தில் பிறக்கிறதற்குக் காரணமாகும். அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு  இலங்கையை ஆண்ட  நாகர்குல அரசன்  தேவநம்பியதீசன் (கிமு 247 – 207) பவுத்த மதத்தை தழுவும் வரை அவனது முன்னோர்கள் வேதநெறி வழிபாட்டினராகவே (இன்றைய இந்து மதம்) இருந்திருக்கிறார்கள்.

நட்சத்திர ஆண்டுக்கும்  வெப்ப மண்டல ஆண்டுக்கும் (tropical year) இடையில் 20  மணித்துணி  வேறுபாடுவதால் (நட்சத்திர ஆண்டு  வெட்ப மண்டல ஆண்டை விட 20 மணித்துளி நீளம்) பவுத்த – இந்து ஆண்டு ஒவ்வொரு ஆண்டும் பிந்தியே பிறக்கிறது. வெட்பமண்டல ஆண்டு பருவங்களுக்கு ஒத்திசையாக இருக்கிறது. நாங்கள் பயன்படுத்தும் கிறகோறியன் நாட்காட்டி இந்த ப் பருவ காலங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

நட்சத்திர ஆண்டுக்கும்  வெட்ப மண்டல ஆண்டுக்கும் இடையில் காணப்படும் கால வேறுபாட்டை  அயனாம்சம் என அழைக்கிறார்கள். இது புவி தனது சுற்றுப் பாதையில் சந்திரனின் ஈர்ப்புச் சக்தி  காரணமாகப் பின்னோக்கி நகருகிறது. ஆண்டொன்றுக்கு 20 மணித்துளி வீதம் 72  ஆண்டிளில் சூரியன் தனது ஓடுபாதையில் ஒரு பாகை பின் சென்று விடும். கிபி  2160 ஆண்டளவில் 30 பாகை அதாவது ஓர் இராசி பிந்திவிடும். ஆங்கிலத்தில் இதனைஅயன முந்துநிகழ்வு (Precession of the Equinoxes) என வானியலாளர்கள் அழைக்கிறார்கள்.

சித்திரைப் புத்தாண்டு

தமிழர்கள் மூன்று புத்தாண்டுகளை – ஆங்கில புத்தாண்டுசித்திரைப் புத்தாண்டு மற்றும் தைப் புத்தாண்டு – கொண்டாடுகிறார்கள் எனத் தொடக்கத்தில் கூறியிருந்தேன். நீண்ட காலமாகத் தமிழர்கள் – குறிப்பாக தமிழ் இந்துக்கள் – சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடி வருகிறார்கள். பவுத்த ஆண்டுப் பிறப்புப் போலவே சித்திரைப் புத்தாண்டும் சூரியன் மேட இராசியில் ( ஆடுதலை) புகும் நாளன்று பிறக்கிறது. சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும். புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புத்தாண்டு வரவேற்கப்படுகிறது. சித்திரை மாதத்தில் இளவேனில்காலம் (வசந்தம்)  தொடங்குகிறது.

இளவேனில்  காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்கள்மாம்பூக்கள்,  வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள்  பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும்கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இது கருதப்படுகிறது.

தாயகத்தில் சித்திரைப் புத்தாண்டில்  மருத்துநீர் வைத்துத் தோய்தல்,  புத்தாடை அணிதல்,  அறுசுவை உணவு உண்ணல்கை விசேடம் கொடுத்தல்ஊஞ்சல் ஆடுதல்போர்த் தேங்காய் அடித்தல்கும்மியடித்தல்கொக்கான் வெட்டுதல்,  மாட்டு வண்டிச் சவாரி,  தலையணை சண்டை வழுக்கு மரம் ஏறுதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.  சித்திரை மாதம் பௌர்ணமி அன்று பூம்புகார் நகரில் இந்திர விழா கொண்டாடப்பட்டதாக இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை தெரிவிக்கின்றன. பசியும்பிணியும்பகையும் நீங்கி மழையும் வளமும் எங்கும் சுரக்கட்டும் என இந்திரவிழாவில்  வாழ்த்தினார்கள். இவ்வாறெல்லாம் பூம்புகார் நகரில் உள்ள பட்டினப் பாக்கத்துப் பகுதிகள் அனைத்திலும் விழா அணி பற்றிய செய்தியினை வள்ளுவன் முரசறைந்து தெரிவித்தான்.Image result for பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க!என வாழ்த்தி
அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென்  (70-72)

தைப் புத்தாண்டு 

சித்திரைப் புத்தாண்டு போலவே தை முதல்நாளைப்  பொங்கல் நாளோடு சேர்த்துத்   தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாளாகக் கொண்டாடும் வழக்கம் கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. தை முதல் நாள் பொங்கல், தமிழ்ப்  புத்தாண்டுதிருவள்ளுவர் பிறந்த நாள் (கொண்டாட்டம் தை இரண்டில்) என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தை முதல் நாள் திருவள்ளுவர் பிறந்த நாள் அதுவே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் ஆகும்.  மாதங்களில் தை மாதம் சிறப்பான மாதமாகக் கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவர் கிமு 31 ஆம் ஆண்டு பிறந்தார் எனக் கணிக்கப்படுகிறது. ஆங்கில ஆண்டோடு 31 யைக் கூட்டினால் வள்ளுவர் ஆண்டு வரும்.

சித்திரை மாதத்துக்கு வானியல் அடிப்படை இருப்து போல தைப் புத்தாண்டுக்கும் வானியல் அடிப்படை இருக்கிறது. தை முதல்நாளே சூரியன் தனது தென்திசைப் பயணத்தை முடித்துக் கொண்டு வட திசைப் பயணத்தை மேற்கொள்கிறான். இதனை உத்தராயணம் என்பார்கள். அந்த உத்தராயணத்தின் தொடக்கம்தான் தை  முதல் நாள்.

இந்த நாளில்தான்  சூரியன் தனது பயணித்தில்  12 இராசிகளைக் கொண்ட இராசிச் சக்கரத்தில் உள்ள  மகர இராசிக்குள் நுழைகிறது.   அடுத்த ஆறுமாதமும் பகல் பொழுது கூடிக் கொண்டே போகும். 

காடு வெட்டிகளனி திருத்திஉழுதுவரப்புக் கட்டிஎருயிட்டுநெல்விதைத்துகளை பிடுங்கிநெற்பயிர்கள் காய்த்துக் குலுங்கும் போது அதனை அறுவடை செய்துகுத்தி அரிசியாக்கி புதுப்பானையில் பொங்கி  இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும்  மற்ற உயிர்களுக்கும்  படைத்து  நன்றி செலுத்தும் நாளே பொங்கல் நாளாகும். இந்த நாள் முழுக்க முழுக்க உழவர்கள் நாளாகும். அது ஆண்டு தோறும் தை முதல் நாள் அன்று வருகிறது. 

தமிழர்கள் உட்படப் பெரும்பாலான மக்களின் உணவுத் தேவைகளை நெல்லே அதிகம் நிறைவு செய்கிறது. இதற்கு ஒளவையார் காலத்துப் பாடல்களே சான்று. “வரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும்.. நெல்லுயரக் கோன் உயர்வான்” என்று அன்றே ஒளவை உழவுத்தொழிலின் முக்கியத்துவத்தையும் செல்வாக்கையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

பொங்கல் பண்டிகையின் இன்னொரு சிறப்புதமிழ் மாதங்களில் தலை மாதமான தை  திங்களில் தொடங்கும் எதுவும் துலங்கும் தழைத்தோங்கும் என்ற நம்பிக்கை தமிழர்களின் மனதில் காலம் காலமாக வேரூன்றி விட்ட மரபாகும். தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியே அதற்கு நல்ல சான்று பகருகின்றது. 

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாளாக  மாற்றப்பட்டதற்குக்  காரணங்கள் பின்வருமாறு –Image result for valluvar images

(1) இப்போதுள்ள பிரபவ – அட்சய  ஆண்டுமுறை 60 ஆண்டுகளை மட்டும் கொண்டது. அறுபது  ஆண்டுகளுக்குப் பின்னர் 61 ஆவது ஆண்டு இல்லை. மீண்டும் ஒரு சக்கரவடிவில்  பிரபவ – அட்சய என ஒரு சுற்று வருகிறது.

(2) இந்த ஆண்டு முறையில் கூறப்பட்டுள்ள ஆண்டுகள் ஒன்றேனும் தமிழில் இல்லை.

(3) வராலாற்றைப்  பதிவு செய்ய இந்தச்  சுழற்சி ஆண்டுமுறை குழப்பத்தை உண்டாக்கும். ஒருவர் மன்மத ஆண்டில் பிறந்தார் என்றால் எந்த  மன்மத ஆண்டு என்ற கேள்வி எழுகின்றது.   நடைமுறையில் வடநாட்டு கலியுக மற்றும் சக ஆண்டுகளை யாரும் பயன்படுத்துவதில்லை.

(4ஒரு சிறந்த நாகரிகம் படைத்த தமிழர்களுக்கு  ஏனைய இனத்தவர் போல சொந்தமாக ஒரு தொடர் ஆண்டு வேண்டும்.

(5) சித்திரைப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த கொண்டாட்டம் ஆகும்.

பிரபவ தொடங்கி அட்சய என்ற  60 ஆண்டு முறையால் தமிழர் மொழிமரபுமானம்பண்புவாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும்  இரண்டையும் எண்ணிப் பார்த்துஉணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள்சான்றோர்கள்புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.  500 பேர் கொண்ட அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு பிறப்புப் என முடிவு செய்தது.

திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின்  தொடக்கம் என்பது ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழறிஞர்களும் ஏற்றுக் கொண்டுள்ளப்பட்டது. தை முதல் நாளும் தமிழக அரசுகளும் 1969 ஆம் ஆண்டு கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த போது பொங்கலுக்கு அடுத்த நாளை திருவள்ளுவர் நாள் என்று அறிவித்து அரசு விடுமுறை நாளாக அறிவித்தார். 

பின்னர் 1971 ஆம் ஆண்டுதமிழறிஞர்கள் 50 ஆண்டுகாலத்துக்கு முன்பு எடுத்த முடிவின் அடிப்படையில் “திருவள்ளுவர்” ஆண்டு நடைமுறையைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது.  இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு நாட் குறிப்பில் பின்னர் தமிழ்நாடு அரசு இதழிலும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

1981ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் திருவள்ளுவர் ஆண்டு நடைமுறை அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைமுறைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து 1989 இல் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் தை முதல் நாள்திருவள்ளுவர் பிறந்த நாள்பொங்கல் நாள் என கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம் சனவரி 28, 2008 அன்று சட்ட சபையில் ஒரு மனமாக நிறைவேற்றப்பட்டது. அதனை ஆதரித்து அதிமுக உறுப்பினர்களும் வாக்களித்தார்கள்.

ஆனால் 2011 இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாள் என ஒகஸ்து 23, 2011 அன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார்.

இருப்பினும்  பொங்கல், தை முதல்  நாள் தை ஆண்டுப் பிறப்பாகத் தமிழ் கூறும் நல்லுலகு எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் இந்துக்கள் மட்டுமல்ல கிறித்தவ தமிழர்களும் கலந்து கொள்ளலாம். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே என்று பவணந்தி அடிகளின் நன்னூல்  கூறுகின்றது. இந்த இனிய பொங்கல் புத்தாண்டு நந்நாளில் –

எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
தெறிந்தநல் .அறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதி முன் பனியே போல அகல வேண்டும்
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க!

Share the Post

You May Also Like