தமிழரசு வவுனியா இளைஞர் அணி துனை தலைவரின் தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தி

தமிழர் திருநாளாம் இந்தத் தைத்திருநாளில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் சான்றோர் வாக்கிற்கிணங்க,  தமிழ் பேசும் மக்களாகிய நாம் ஒற்றுமையுடன் எமது இலக்கு நோக்கி பயணிக்க நல்லதோர் ஆரம்பமாக இத்திருநாள் அமைய வேண்டுமென இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் துணைத்தலைவரும், வவுனியா மாவட்ட இளைஞர் அணித்தலைவருமாகிய பாலச்சந்திரன் சிந்துஜன் தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

எம்மினம் உரிமை மற்றும் அபிலாசைகள் சார்ந்த விடயங்களில் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கும் இனமாக உள்ளோம். ஆயுத ரீதியாக தொடர்ந்து போராடி தற்போது ஜனநாயக ரீதியில் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

எமக்குள் இருக்கும் பகைமைகள், கருத்து முரண்பாடுகள் யாவற்றையும் விடுத்து ஒரு தலைமையின் கீழ் ஒரே இனமாக இன்றாகி எமது உரிமை நோக்கிய பயணத்தை இந்த நன்னாளில் இருந்து ஆரம்பிக்க அனைவரும் திடசங்கற்பம் கொள்ள வேண்டும்.

இந்த தமிழர் திருநாள் ஆரம்பமானது உங்களதும், எம் இனத்தினதும் எண்ணங்களையும், எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றும் ஆண்டாக அமையவும் இறை அருளை வேண்டுவதுடன் உங்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாளாம்  தைத்திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என அவ் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share the Post

You May Also Like