தமிழர் தலைநகர் திருமலையில் கூட்டமைப்பின் பொங்கல் விழா!

தமிழர்களின் தலைநகராம் திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின பொங்கல்விழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதமவிருந்தினராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கலந்துகொண்டார்.

நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், யாழ்.மாநகர முதல்வர் இமானுவல் ஆனோல்ட் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள், பிரதேசசபை, நகரசபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Share the Post

You May Also Like