5 வருடத்தில் கோழிப்பண்ணைகூட உருவாக்க முடியாத தமிழ் மக்களின் நந்தவனத்தாண்டி சி.வி.விக்னேஸ்வரன்!

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”

விளக்கம்

மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரண வேடிக்கைப் பாடல் போலத் தோன்றும். ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார். மனித உயிர்(சீவன்) ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப்பட்டு இருக்கிறது. இங்கே படைப்புக்குரியவன் குயவன் என்று சொல்லப்பட்டுகிறான். சீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று நாலாறு மாதமாய் (பத்து) மாதமாய் வேண்டிக்கொண்டதன் விளைவாக, படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான்.

சீவன் இறைவனிடம் வேண்டிப்பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது. இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குயவன்(இறைவன்) செய்து கொடுத்தான்.

தோண்டி(உடல்) கிடைத்தவுடன் ஆண்டி கண் மண் தெரியாமல் கூத்தாடினான், தோண்டியை போட்டுடைத்தான், ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. தோண்டியை(உடல்) தவறாக பயன்படுத்தி உடைத்து விடுகிறான் ஆண்டி.(மனிதன்)

இந்தப் பாடலை படிக்கும் போது ஓர் அரசியல்வாதி உங்கள் அகக் கண் முன் தோன்ற வேண்டுமே?

செத்தனே சிவனே என்று  காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த  விக்னேஸ்வரனை அரசியலுக்கு கூட்டி வந்து வட மாகாணத்தின் முதலமைச்சராக ஆக்கியவர் சம்பந்தர். ஆனால் விக்னேஸ்வரன் அந்த மாகாணசபையை ஒன்றுக்கும் உதவாதவாறு போட்டுடைத்து விட்டார்.  பிரதமரோடு சண்டை, அமைச்சர்களோடு சண்டை, தனக்குப் பிடிக்காத அமைச்சர்களுக்கு கல்தா, 30 ஆண்டுகள் நீதியரசராகக் குப்பை கொட்டியவருக்கு ஒரு அமைச்சரை எப்படிப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதே அவருக்குத் தெரியவில்லை. உச்ச நீதிமன்றம் அவரது தலையில் குட்டிய பின்னரும் டெனீஸ்வரனை பதவியில் அமர்த்த மறுத்தார். இதனால் இப்போது நீதிமன்ற அவமதிப்பு அவருக்கு எதிராக நடக்கிறது.

வடக்கு மாகாண சபையின் ஐந்து ஆண்டு காலத்தில் விக்னேஸ்வரனால் ஒரு கோழிப்பண்ணை கூடத் தொடக்க முடியவில்லை. சுன்னாகம் மக்கள் தண்ணீரைக் குடிக்கலாமா? கூடாதா என்பதற்கு இன்னும் விடையில்லை.

444 தீர்மானங்களை நிறைவேற்றியவர் 10 மாகாண சட்டங்களைக் கூட நிறைவேற்றவில்லை!

Share the Post

You May Also Like