வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூரைத்தகடுகள் வழங்கிவைப்பு!

அளவெட்டி பத்தானைபிரதேசத்தில் வறுமைகோட்டின் கீழ் வாழும் குடும்பம் ஒன்றுக்கு வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் செல்வக்குமரன் விஜயராஜால் வீட்டு கூரைக்குரிய தகரங்கள் வழங்கப்பட்டன.

தனது பிரதேசத்தில் உள்ள மிகவும் வலுக்குன்றிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனே லயன் விஜயராஜால் மேற்படி கூரைத் தகரங்கள் தனது சொந்த நிதியில் வழங்கப்பட்டன.

வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சோ.சுகிர்தனின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட  இந்த நிகழ்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதி ஆகியவற்றின் தலைவருமான மாவை சோ.சேனாதிராசா நேரில் சென்று குடும்பத்துக்குரிய கூரைத் தகடுகளை வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சே.கலையமுதனும் கலந்துகொண்டார்.

வலி.வடக்கு பிரதேசசபையின் 12 ஆம் வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் லயன் செல்வக்குமரன் விஜயராஜ், ஒவ்வொரு மாதமும் தனது பிரதேசத்திலுள்ள விளையாட்டுக் கழகங்கள், மக்களின் வாழ்வாதாரம் என பல்வேறு சமூக சேவைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like