சுமந்திரன் கொலை சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் புலிகள் உறுப்பினர்கள் மற்றும் பாதாள உலகக் கோஷ்டியினர் அடங்கிய பதினைந்து சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைப்பதற்கு கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜெயரட்ண நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார்.

கடந்த டிசெம்பர் 31ஆம் திகதி வரை அரச புலனாய்வுப் பிரிவினால் தடுப்புக் காவல் உத்தரவுப் பத்திரத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள் தற்போது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். வெளிநாட்டில் இருக்கும் புலம் பெயர் தரப்புகள் சில தென்னிலங்கையில் உள்ள பாதாள உலகக் கோஷ்டியுடன் இணைந்து சுமந்திரனைக் கொல்வதற்குச் சதித்திட்டம் தீட்டின எனவும் இதற்காகப் பெருந்தொகை நிதி வெளிநாட்டில் இருந்து வந் துள்ளதாகவும் தெற்கில் உள்ள பாதாள உல கக் குழுவினர் இந்தப் படுகொலை வேலையைச் செய்வதற்காக சில முன்னாள் புலிப்போராளிகளைப் பயன்படுத்த முயற்சித்தனர் எனவும் விசாரணைகளில் தெரியவந்தது என்று கூறப்பட்டடது. அரச புலனாய்வுச் சேவை (எஸ்.ஐ.எஸ்.) மற்றும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு (சி.சி.டி.) ஆகியன இந்தவிடயங்கள் பற்றிய விசாரணைகளை நுணுக்கமாக மேற்கொண்டிருக்கின்ற என்றும் தெரிவிக்கப்பட்டது.

கட்சிக்குள் மூடிய அறைக்குள் பேசியவற்றை கசியவிட்டுச் செய்தியாக்கிக் குளிர்காய்பவர்கள் சுமந்திரன் காட்டம்

யாழ்ப்பாணம்,ஜன.30 கட்சிக்குள் மூடிய அறைக்குள் கதைத்த விடயங்களை ஊடகங்க ளிற்கு தெரிவித்து, செய்தியாக்கி குளிர் காய்பவர்கள் இருக்கிறார்கள். இதுதான் கட்சிக்கு விரோதமான விடயம். யாருக்கு வேட்புமனு வழங்கலாம், வழங்கக் கூடாது என நான் மூடிய அறைக்குள் பேசியது கட்சிக்கு விரோதமானது அல்ல என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். அண்மையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனா திராசாவை தனிமையில் சந்தித்த எம்.ஏ.சுமந்திரன், யாழில் ஈ.சரவணபவனிற்கு வேட்புமனு வழங்க வேண்டாமென கேட்டுக் கொண்டார். இந்த விவகாரத்தை இணையத்தளம் ஒன்று முதன்முதலில் அம்பலப்படுத்தியது. நேற்று முன்தினம் யாழ்ப்பாணத் தில் எம்.ஏ.சுமந்திரனிடம் இந்த விவ காரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி யெழுப்பினர்.

உட்கட்சி விவகாரங்களைப் பகிரங்க மாகப் பேசக்கூடாது. அதனால் மற்றவர் களின் கருத்திற்கு பதிலளிக்கவில்லை. தேர்தல் என்றால் பல விடயங்கள் பேசப்படும். கட்சியின் அரசியல் குழுவில் நான் இந்த விடயங்களைப் பேசியிருந்தேன். இதனால்தான், படித்த, இளையவர்க ளிற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டு மென சம்பந்தன் அறிவித்தார். அதைவிட, பெண்களிற்கு 50 வீதம் வாய்ப்பளிக்க வேண்டுமென்றும் சொன்னேன். அனுபவம் மிக முக்கியமானது. அவர்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை. அவர்கள் எம்மை வழிநடத்த வேண்டும். அதேநேரம், ஏற்கனவே எம்.பியாக இருப்பவர்களிற்குவாய்ப் பளித்துவிட்டு மிகுதியான இடங்களை மற்றவர்களிற்கு பகிர்ந்தளித்தால், இளையவர்களிற்கு எப்படி வாய்ப்பளிப்பது?

கடந்த தேர்தலில் நான் கண்ட அனுபவம், தோற்கும் வேட்பாளர்களை நிறுத்தும் வழக்கமொன்றுண்டு. அதை எல்லா கட்சிகளும் செய்கின்றன. இருப்பவர்களிற்குத் தானாக நியமனம் வழங்க வேண்டாமென்று நான் கூறினேன். எம்.பியாக இருப்பதால் எனக்கும் தர வேண்டியதில்லை. எனது பெயரையும் மேசையில் வையுங்கள். புதிதாக வருபவர்களின் பெயர்களையும் வையுங்கள். யார் பொருத்தமானவர் என்பதை பார்த்து நியமனம் வழங்குங்கள்.  எவருக்கு கொடுப்பது, எவருக்கு கொடுப்பதில்லை என்பதை நாங்கள் பேசினோம். அது கட்சிக்குள் நடப்பது. பேசாமல் எப்படி நியமனம் வழங்குவது? ஆனால், கட்சிக்குள் பேசுவதை இணையதளத்திற்கு கொடுப்பதுதான் கட்சிக்கு விரோதமானது. கட்சிக்குள், மூடிய அறைக்குள் நான் பேசியவற்றை செய்தியாக்கிக் குளிர் காய்பவர்கள் பற்றி என்னால் ஒன்றும் சொல்ல முடியாது – என்றார்.

Share the Post

You May Also Like