ஸ்ரீதரனின் நிதியில் பச்சிலைப்பள்ளியில் திறன் வகுப்பறை

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிளி மாசர் மகாவித்தியாலயத்திற்கு  திறன் வகுப்பறை அமைக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினரால் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை சமூகத்தினதும் பழைய மாணவர்களினதும் கிராம மக்கள் அதன் தொடர்ச்சியான வேண்டுகோளினை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களால் தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஊடாக ரூபா அரை மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு குறித்த வகுப்பறை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு செய்யப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு மாசார் மகாவித்தியாலயத்தினுடைய அதிபர் திரு கருணாநந்தம் தலைமையில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகியது இங்கே பச்சிலைப்பள்ளி பிரதேச சபையயின்  உறுப்பினர்கள் அருள்செல்வி மற்றும் ரமேஷ் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .
Share the Post

You May Also Like