எமது இருப்பைத் தக்கவைக்க கல்வி மிகவும் அவசியமானது! என்கிறார் சிறிதரன் எம்.பி.

தாய்த் தேசத்திற்காக மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி வேரவில் இந்து மகாவித்தியாலயத்தின் இன்று இடம்பெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் –
இன்று நாம் கற்றுக் கொள்ளும் கல்வி எமது தாய்த்தேசத்திற்காகவும் எமது இனத்தின் இருப்பினை தக்க வைத்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும் பாரம்பரிய பண்பாட்டியலைக் கொண்டவர்கள் தமிழர்கள் ஆனால் எங்கள் மாணவர்களும் இளைஞர்களும் இந்த மண் பற்றியோ இனம் பற்றியோ சிந்திக்க கூடாது என்பதற்காகவே எங்கள் இளம் சமுதாயத்தினரை தவறான பழக்கவழக்கங்களுக்கு அடிமையாக்க நினைக்கிறார்கள். நாம் எதற்கும் விலை போகாதவர்களாக கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கவேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலையின் முதல்வர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர்கள் கிளிநொச்சி கல்வி வலயத்தின் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர்  இலங்கை வங்கி முழங்காவில் கிளையின் முகாமையாளர் அயற் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Share the Post

You May Also Like