மட்டு.மாநகர ஊழியருக்கு நோய்தொற்று பாதுகாப்பு சீருடை!

மட்டக்களப்பு மாநகர சபையின் சுகாதார ஊழியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வானது  நேற்று நகர மண்டபத்தில் இடம்பெற்றது

தற்போது நாட்டில் நிலவும் வைரஸ் தாக்கம் உள்ளிட்ட நோய்த்தொற்றுக்களில் இருந்து மாநகர சபையின்  ஊழியர்களைப் பாதுகாக்கும் நோக்கிலும், ஊழியர்களை பொதுமக்களுக்கு இலகுவாக அறிமுகப்படுத்தும் வகையிலும் மட்டக்களப்பு மாநகர சபையின் நிதியிலிருந்து சபை நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் ஊழியர்களுக்கான சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன.

மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல், பிரதி முதல்வர் க .சத்தியசீலன், சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மாநகர சபையின் உறுப்பினர்கள் உட்பட மாநகர சபையின் ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர் .

Share the Post

You May Also Like