செட்டிகுளம் கலைமகள் விளையாட்டுக் கழக 50 வது ஆண்டு நிறைவில் சத்தியலிங்கம்.!

செட்டிகுளம் கலைமகள் விளையாட்டுக் கழகத்தின் 50வது ஆண்டு நிறைவு விழா கழகத்தின் தலைவர் திரு.மயூரன் தலைமையில் கடந்த 04.02.2020 அன்று செட்டிகுளம் கலைமகள் கழக மைதானத்தில் சிறப்பாக…

முன்னாள் தலைவர்கள் செய்த தவறையே கோட்டாவும் செய்கின்றார் – ஸ்ரீநேசன்!

1956 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளில் முன்னாள் தலைவர்கள் செய்த தவறையே, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் செய்து வருகிறார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

விக்கி கூட்டணிக்குத் தமிழ் மக்கள் தேர்தலில் சாட்டை அடி கொடுப்பர்! வாக்கை உடைப்பதற்கே என்கிறார் மாவை

“தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்கத்துடன்தான் விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கூட்டணியின் கனவு ஒருபோதும் பலிக்காது. இந்தக் கூட்டணிக்குத்…

எமது பண்பாட்டை கட்டிக்காப்பதற்காய் மாணவர்கள் கற்க வேண்டும் சிறீதரன் எம்.பி

எமது பண்பாட்டினை கட்டிக்காப்பதற்காய் மாணவர்கள் கற்கவேண்டும் எனத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பளை மாசார் அ.த.க. பாடசாலையின் வருடாந்த இல்ல…

கூட்டமைப்பு கிழக்கில் பொதுச்சின்னத்தில் போட்டியிட வேண்டுவது வேடிக்கையானது! என்கிறார் அரியநேத்திரன்

கிழக்கு தமிழர் ஒன்றியம் மூன்றாக பிரிந்துள்ள நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பொதுச்சின்னத்தில்கிழக்கில் தேர்தலில் போட்டியிடவேண்டும் என கேட்பது வேடிக்கையான விடயம் எனக்கூறினார் மட்டக்களப்புமாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமானபா.அரியநேத்திரன். தமிழ்தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் ஒரு பொதுச்சின்னத்தில் தேர்தலில் போட்டியிடமுன்வரவேண்டும் என கிழக்கு தமிழர் ஒன்றியத்தலைவர் சட்டத்தரணி சிவநாதன் ஊடகங்களில் கூறிய கருத்து  தொடர்பாக அரியநேத்திரனிடம் கேட்டபோது  மேலும் கூறியதாவது. ஒற்றுமையாக தமிழ்தேசிய கூட்டமைப்பில் அனைவரும் இணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில்மாற்றுக்கருத்துக்கள் இல்லை. ஒற்றுமை என்றும் கிழக்கு தமிழர் என்றும் வடக்கு தமிழர் என்றும் இரண்டாக கூறுபோட்டு பிரதேசவாதஅரசியலை கைவிட்டு வடக்குகிழக்கு என்ற பரந்துபட்ட ஒரு ஒற்றுமையாக அனைத்துக்கட்சிகளும்ஒன்றினைவதே தமிழர்களின் அரசியல் பலத்துக்கான சாத்தியமாக அமையும். கிழக்கு தமிழர் ஒன்றியம் ஆரம்பிக்கும் போது அந்த அமைப்பில் முக்கிய பதவிகளில் இருந்த பேராசிரியர்செல்வராசா தற்போது ஜக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளராக செயல்பட்டு தற்போதுபுதிய கட்சியான தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார் அதன் தேசிய அமைப்பாளராகபேராசிரியர் செல்வராசா இணைந்துள்ளார். அடுத்தவர் கோபாலகிருஷ்ணன் என்ற தமிழர் மகாசபை கட்சி செயலாளராக இருந்து கிழக்கு தமிழர்ஒன்றியத்தை ஆரம்பித்தவர் அவர் தற்போது பிரிந்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பு எனும் புதிய கட்சியைஆரம்பித்துள்ளார். கிழக்கு தமிழர் ஒன்றியம் இவ்வாறு மூன்று கூறாக பிரிந்து தனித்தனியாக புதிய பெயர்களில் கட்சிகளைஆரம்பித்துள்ள நிலையில் அவர்களில் இருந்து பிரிந்து சென்ற மூன்றுகட்சிகளை முதலில் ஒன்றாக ஒருபொதுச்சின்னத்தில் போட்டியிட முடியாத நிலையில் தமிழ்தேசியகூட்டமைப்புக்கு கிழக்கு தமிழர் ஒன்றியம்எப்படி அழைப்புக்கொடுக்கமுடியும். இதைவிட மழைக்கு காளான் முளைப்பதைபொல் இன்னும் பல கட்சிகள் மட்டக்களப்பில் முளைத்துள்ளன அந்தகட்சிகள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் முதலில் கொண்டுவருவதற்கான முயற்சியை செய்துவிட்டு அதில்வெற்றிகண்டுவிட்டு அதன் பின் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு கொடுப்பது ஒரளவு பொருத்தமாகஇருக்கும் அழைப்பு கொடுப்பவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் கொள்கை கோட்பாடுகளை பற்றி ஏளனமாகஏற்கனவே ஊடகங்களில் விமசனம் செய்துவிட்டு உள்ளத்தால் தமிழ்தேசிய கூட்டமைப்பை குற்றம் சுமத்திபேசிவிட்டு உதட்டால் ஒற்றுமை பொதுச்சின்னம் என்ற வார்த்தைகளை கூறுவது எந்தவகையில் பொருந்தும். தமிழ்தேசியகூட்டமைப்பு வடக்கில் ஒருசின்னத்திலும் கிழக்கில் வேறொரு சின்னத்திலும் எந்த தேர்தலிலும்இதுவரை போட்டியிடவும் இல்லை இனியும் அப்படி போட்டியிடவேண்டிய தேவையும் எழாது. முடிந்தால் கிழக்குதமிழர் வடக்குதமிழர் என்று தமிழர்களை பிரித்து பிரதேசவாத அரசியலை விட்டுவடக்குகிழக்கு தமிழ்மக்கள் என்ற எண்ணப்பாட்டுடன் ஒற்றுமையாக தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்துபொதுச்சின்னத்தை விட்டு வீட்டுச்சின்னத்தில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சிந்திப்பதேநல்லது. தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்து  2001, ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை 19, வருடங்களாக 4, பொதுத்தேர்தல்கள்,2, மாகாணசபைதேர்தல்கள், வடக்கு கிழக்கில் இடம்பெற்ற  அனைத்து உள்ளுராட்சிநகரசபை மாநகரசபை தேர்தல்கள் அனைத்திலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு வடக்கில் ஒரு சின்னம் கிழக்கில்வேறு சின்னம் என பிரித்து கேட்கவில்லை இலங்கை தமிழரசு கட்சியான வீட்டு சின்னத்திலேயே தேர்தல்களைஎதிர்கொண்டோம் அவ்வாறான நிலைப்பாடுதான் எதிர்வரும் பொதுத்தேர்தல் மாகாணசபை தேர்தல்கள்எல்லாம் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடும். தேர்தல்காலத்து ஒற்றுமையை என்பதைவிட தமிழ் மக்களுக்கான திரந்தர ஒற்றுமை பற்றி சிந்திக்கவேண்டியநிலை எமக்கு உண்டு, தேர்தல் விளம்பரத்துக்காக ஒற்றுமை என்ற சொல், ஒருகுடை என்றசொல்,கிழக்குதமிழர் என்றசொல், மாற்றுத்தலைமை என்ற சொல் பலராலும் உச்சரிக்கப்படுவது வழமையான அரசியல் தமிழ்தேசிய கூட்டமைப்புஎந்த நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கம் அடையும் வரை அதன்பயணம் தொடரும்பயணங்கள் செல்லும் பாதைகளில் தடைகள் தாமதங்கள் வரலாம் அதற்காக நோக்கத்தை கைவிட்டுசந்தர்பவாத அரசியல் செய்ய முடியாது, அபிவிருத்தி அன்றாடதேவை என்பதை பெற்றுக்கொள்வதற்கானஅரசியலுடன் தமிழ்மக்களின் அபிலாஷைகளையும் பெற றுக்கொள்ளவேண்டிய தேவை உண்டு எனவேதமிழ்தேசிய கூட்டமைப்பு அபிவிருத்தி வேலைவாய்ப்பு பொருளாதாரமேம்பாடு இவைகளுடன் அரசியல் தீர்வைபெறும் விடயங்களையும் இணைத்துத்தான் அரசியல்பணிகளை செய்யமுடியும் அரசியல் தீர்வை கைவிட்டுதனியாக அபிவிருத்தியை மட்டும் கொள்கையாக கொண்டு நாம் அரசியல் பணி செய்யப்போவதில்லை என்பதைஅனைவரும் புரிதல் நல்லது. தமிழ்தேசிய கூட்டமைப்பு பொதுச்சின்னத்தில் ஒன்றுணையுமாறு வேண்டுகோள் கொடுப்பவர்கள் தமிழ்தேசியகூட்டமைப்பை பலப்படுத்த ஒன்றிணைவதே இன்றயதேவை. தற்போது வடமகாணத்தில் விக்கினேஷ்வரன் ஐயா தமிழ்மக்கள் தேசிய கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியைஇன்று 09/02/2020, ஆரம்பித்துள்ளார் இந்த கட்சி இப்பதான் ஒருநாள் குழந்தை இந்த குழந்தை தவண்டுவளர்ந்து தடந்து சிறுவராகி மாணவராகி இளைஞராகி பெரியவராக இன்னும் எத்தனை வருடங்கள் எடுக்கும், ஏற்கனவே வளர்ச்சிபெற்று பல தேர்தல்களில் ஜனநாயக அங்கீகாரம் பெற்றுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின்இடத்தை பிடிக்கவோ அல்லது மாற்றீடான கட்சியாக பரினாம வளர்ச்சிபெறவோ பல காலம் எடுக்கும் என்பதேஜதார்தம். இதுபோன்றுதான் கிழக்கில் பல கட்சிகள் திருவிழா காலத்து முட்டய் கடைகளை போன்று இன்னும் புதிய புதியபெயர்களில் கட்சி கடைகள் திறக்கப்படால் அவை அனைத்தும் மக்கள் மத்தியில் இடம்பிடிக்காது. கோயில் வீதியில் அல்லது பஷ்தரிப்பு நிலையங்களில் பொதுச்சந்தைகளில் துண்டுப்பிரசுரங்கள்வினியோகிப்பதால் மட்டும் ஒற்றுமை  ஏற்படும் என கருதமுடியாது  எனவும் மேலும் கூறினார்.