இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதமவிருந்தினராக சிறிதரன்!

யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்தான சி.சி.த.க பாடசாலையின் இல்ல மெய் வல்லுனர் போட்டி இன்று (14) கல்லூரி அதிபர் தலைமையில் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சி.சிறிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு விருந்தினராக யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வில் யாழ் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், கோட்டக் கல்வி அலுவலக அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share the Post

You May Also Like