கிளிநொச்சியில் முதன் முதலாக தாய்ப்பாலூட்டும் அறையொன்று திறந்து வைப்பு

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபையினால் பொதுச்சந்தை வளாகத்தில் தாய்ப்பாலூட்டும் அறையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி பேருந்து நிலையம் மற்றும் பொதுச்சந்தை ஆகியவற்றிற்கு பல்வேறு தேவைகளுக்காக வரும் பாலூட்டும் தாய்மார்களின் நன்மை கருதியே திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன், சபை உறுப்பினர்கள், பிரதேசசபையின் செயலாளர் கா.சண்முகதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

Share the Post

You May Also Like